ஆன்ட்ரியா வெளியிட்ட வொர்க் அவுட் வீடியோ.. இதுலகூட கவர்ச்சி தூக்கலாதான் இருக்கு!
சென்னை : நடிகை ஆன்ட்ரியா தமிழ் சினிமாவின் முக்கியமான பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் கலக்கிக் கொண்டிருப்பவர்.
இவரது பாடல்கள் ரசிகர்களை வசீகரிக்கும் ரகம் என்றால், இவரது நடிப்பும் மிகவும் சிறப்பாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
அடுத்ததாக இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியா நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி அதிகமான வரவேற்பை பெற்றுள்ளது.

பாடகியாக அறிமுகமான ஆன்ட்ரியா
பாடகியாக அறிமுகமானவர்தான் நடிகை ஆன்ட்ரியா. இவரது குரலில் பல சிறப்பான பாடல்கள், தென்னிந்திய அளவில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. ஸ்டைலிஷ்ஷான மாடுலேஷன்களில் இவரது பாடல்கள் அமைவது மிகவும் சிறப்பாக ரசிகர்களை கவரும் அம்சமாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஆன்ட்ரியா குரலில் வெளியான புஷ்பா படத்தின் ஊ சொல்றியா மாமா பாடல் மிகச்சிறந்த வரவேற்பை ரசிகர்ளிடையே பெற்றது.

அதிகமான இசைக்கச்சேரிகள்
பின்னணி பாடல்களை பாடுவதோடு, அதிகமான அளவில் இசைக் கச்சேரிகளிலும் பங்கேற்று ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் ஆன்ட்ரியா. இந்தியாவில் பல இடங்களிலும் இவரது இசைக்கச்சேரி நடைபெற்று வருவது போலவே அதிகமான அளவில் வெளிநாடுகளிலும் இத்தகைய கச்சேரிகளில் பங்கேற்று வருகிறார் ஆன்ட்ரியா. அடுத்தடுத்த படங்களிலும் கமிட்டாகி சிறப்பான நடிப்பை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.

வெற்றிமாறன் தயாரிப்பில் ஆன்ட்ரியா
பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் தமிழில் அறிமுகமான ஆன்ட்ரியா அடுத்தடுத்த படங்களில் தனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் நடித்து வருகிறார். இவரது கேரியர் பெஸ்ட்டாக வடசென்னை படம் அமைந்தது. இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கிய நிலையில், தற்போது அவரது தயாரிப்பில் அனல் மேலே பனித்துளி படமும் இவரது நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு காத்திருக்கிறது. சிறப்பான பாடல்களையும் தொடர்ந்து கொடுத்து வருகிறார்.

பிசாசு 2 படத்தின் ட்ரெயிலர்
சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படத்தில் நடித்து மிரட்டியிருந்தார் ஆன்ட்ரியா. ஹாரர் த்ரில்லர் படமான இந்தப் படத்தில் ஆன்ட்ரியா பேயாக நடித்திருந்தார். முன்னதாக அரண்மனை படத்திலும் இவர் நாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் ஆன்ட்ரியா நிர்வாணக் காட்சியில் நடித்துள்ளதாக கூறப்பட்டது.

சமூக வலைதளங்களில் பிசி
வெற்றிமாறன் தயாரிப்பில் அனல் மேலே பனித்துளி என்ற படத்தில் ஆன்ட்ரியா நடித்துள்ள நிலையில், இந்தப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை 2 படம் உருவாகவுள்ள நிலையில், ஆன்ட்ரியாவிற்கு அந்தப் படத்தில் கேரக்டர் அமையுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஆன்ட்ரியா, கவர்ச்சித் தூக்கலாக பல போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இதையடுத்து ஆன்ட்ரியாவை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகின்றனர்.

ஆன்ட்ரியா வெளியிட்ட வொர்க்அவுட் வீடியோ
அடுத்தடுத்த கவர்ச்சி படங்களை மட்டுமில்லாமல் வொர்க் அவுட் வீடியோக்களையும் ஆன்ட்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள வொர்க் அவுட் வீடியோவை பார்க்கும்போது, சாதாரண மக்களுக்கும் வொர்க் அவுட் செய்யும் ஆசை வந்துவிடும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மல்லாக்க படுத்தபடி ஆன்ட்ரியா செய்யும் வொர்க் அவுட்டில்கூட கவர்ச்சிக்காடாய் ரசிகர்களை பாடு படுத்தத்தான் செய்கிறார்.


Click it and Unblock the Notifications











