Andrea:இதுல சேலை எப்படி நிக்குது? ஜாக்கெட்டே போடாமல் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!
சென்னை: தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா,தனது திறமையால் நடிகையாக மாறிய இவர், கமல்ஹாசன், அமீர், விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தற்போ இவர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள பிசாசு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் வேலைகள் முடிந்து படம் வெளியிட்டுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா தற்போது அட்டகாசமான போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா, அந்நியன் படத்தில் வரும் கண்ணும் கண்ணும் நோக்கியா, வேட்டையாடு விளையாடு படதில் வரும் கற்க கற்க, ஆதவன் படத்தில் இடம்பெற்ற ஏனோ ஏனோ உள்ளிட்ட பல பாடல்களை பாடி உள்ளார்.பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2007ம்ஆண்டு வெளியாக பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில், சரத்குமாரின் மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவரின் எதார்த்தமான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

நடிகை ஆண்ட்ரியா: இதன்பின் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்திக்குடன் வரலாற்று ஆராய்ச்சியாளரான நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்தது மட்டுமில்லாமல், உன் மேல ஆசைதான் பாடலை தனுஷ், ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து பாடி இருந்தார். இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. மங்காத்தா, விஸ்வருபம், உத்தம வில்லன், ஜீவா நடித்த என்றென்றும் புன்னகை, சுந்தர் சி நடித்த அரண்மனை என ஏராளமான தமிழ் படங்களில் நடித்தார்.

பிசாசு 2: தொடர்ந்து நடித்து வந்த ஆண்ட்ரியாவிற்கு திடீரென படவாய்ப்பு குறைந்ததால், சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார்.இதன் வடசென்னை படத்தில் அமீரின் மனைவி சந்திராவாக நடித்திருந்தார். இந்த படம் ஆண்ட்ரியாவின் கரியரிலேயே மிக முக்கியமான படமாக உள்ளது. இந்த படத்திற்கு பிறகு ஆண்ட்ரியான நடித்த தரமணி,வட்டம் போன்ற படத்தில் நடித்தார். அந்த படம் பெரிதாக எடுபடவில்லை. தற்போது, மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள பிசாசு 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தபடத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சேலையில் ஆண்ட்ரியா: நடிப்பு, இசைநிகழ்ச்சி என பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியாக இன்ஸ்டாகிராமில் மூன்று புள்ளி நாலு மில்லியன் பாலோர்களை வைத்து இருக்கிறார். அவர்களை மகிழ்விப்பதற்காக அவ்வப்போது, போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருக்கும் ஆண்ட்ரியா, ஜாக்கெட் அணியாமல்,காட்டன் புடவையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த பேன்ஸ், அட ஜாக்கெட் போடாமல் புடவை எப்படி நிற்கிறது என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











