ஸ்டைலா மாஸா கெத்தா ஆண்ட்ரியா பதிவிட்ட ஒற்றை புகைப்படம்... செம ட்ரெண்ட்!

சென்னை: கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை பெரும்பாலும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை ஆண்ட்ரியா

நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் இவரது குரலில் வெளியாகும் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற சமீபத்தில் வெளியான ஊஊஊ சொல்றியா மாமா சென்சேஷனல் ஹிட் அடித்துள்ளது.

இந்த நிலையில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் செம ஸ்டைலிஷாக எடுத்த புகைப்படத்தை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிசாசு இரண்டாவது பாகத்தை

பிசாசு இரண்டாவது பாகத்தை

நடிகைகள் பலரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியாவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை அதிக கவனம் செலுத்தி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பாடகியாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் இப்பொழுது நடிகையாக தனக்கென தனி இடத்தை பிடித்து வடசென்னை உள்ளிட்ட படங்களில் சில சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்து மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. பிசாசு ஒன்று மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்தை இயக்குனர் மிஷ்கின் விறுவிறு வேகத்தில் இயக்கி வருகிறார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

பிசாசு முதல் பாகத்திலேயே அன்பான பேயாக வித்தியாசமாக காட்டி இருந்தனர். அதேபோல இரண்டாம் பாகத்திலும் வித்தியாசமாக காட்ட உள்ளார். பிசாசு இரண்டில் பேயாக நடிகை ஆண்ட்ரியா நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி , பூர்ணா, சந்தோஷ் பிரதாப், அஜ்மல் என பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்

ஊஊஊ சொல்றியா மாமா

ஊஊஊ சொல்றியா மாமா

பிசாசு இரண்டு இறுதிகட்டத்தை எட்டிருக்கும் நிலையில் மிக விரைவிலேயே ரிலீசாக உள்ளது. அதேசமயம் கா மற்றும் நோ என்ட்ரி உள்ளிட்ட படங்களிலும் ஆண்ட்ரியா கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோல்களில் நடித்து வருகிறார். நடிகையாக தனி இடத்தைப் பிடித்திருந்தாலும் இவரது போதையேற்றும் குரலுக்கு இன்றும் பல ரசிகர்கள் அடிமையாகி உள்ளனர். சில படங்களில் மட்டுமே பாடல்களை பாடி வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் புஷ்பா திரைப்படத்தில் ஊஊஊ சொல்றியா மாமா என்ற பாடலை பாடியுள்ளார். சமந்தாவின் அட்டகாசமான நடனத்தில் உருவான இந்த பாடல் இப்போது ரசிகர்களை பித்து பிடிக்க வைத்துள்ளது

Recommended Video

பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதிலளிக்காத Andrea | Grand Bridal Jewellery opening
ஸ்டைலிஷ் தமிழச்சியே

ஸ்டைலிஷ் தமிழச்சியே

சமீபத்தில் ஆண்ட்ரியா எகிப்த் நாட்டிற்கு சென்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகியது. மீண்டும் ஒரு சுற்றுலாவில் எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் செம ஸ்டைலிஸாக மாஸா கெத்தா ஆண்ட்ரியா நின்று கொண்டிருக்க அதனை பார்த்த ரசிகர்கள் ஸ்டைலிஷ் தமிழச்சியே என வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X