அந்த வயதை கடந்துவிட்டேன்.. அந்த ஃபீலிங்கே வரல.. ஆண்ட்ரியா சொன்னதை கேட்டு ஷாக்கான பேன்ஸ்!

சென்னை: தமிழ்சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா எனக்கு பாட்டு பாடமட்டுமில்ல நடிக்கவும் வரும் என்பதை பல படங்களில் நடித்து நிரூபித்துள்ளார். தற்போது இவர், பிசாசு 2 , நோ என்ட்ரி, கா, மாளிகை என வரிசையாக படங்களை கையில் வைத்துக்கொண்டு நடித்து வருகிறார். அண்மையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சரத்குமார், ஜோதிகா நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாரின் மனைவியாக நடித்திருந்தார் ஆண்ட்ரியா. முதல் படத்திலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்த ஆண்ட்ரியா புடவை, லூஸ் ஹேர், பெரிய பொட்டுடன் வலம் வந்தார். அழகான முகம், அம்சமான நிறம் என இவரின் அழகில் மயங்கிப்போன பேன்ஸ் உன் சிரிப்பினில்...என் மனதின் பாதியும் போக.. உன் இமைகளின் கண்ணிமைகளின்.. மென்பார்வையில் மீதியும் தேய என இவரை வர்ணிக்கத் தொடங்கிவிட்டனர்.

actress andrea Jeremiah Talks about her marriage life

நடிகை ஆண்ட்ரியா: அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின் கமலுடன் விஸ்வரூபம் படத்திலும் நடித்து முன்னணி நடிகை பட்டியலில் இடம் பிடித்தார். மேலும், இவர், தரமணி, துப்பறிவாளன், வட சென்னை, வலியவன், அரண்மனை, என்றென்றும் புன்னகை, மாஸ்டர் உள்ளிட்ட தரமான படங்களில் நடித்து பெயர் எடுத்தார்.

actress andrea Jeremiah Talks about her marriage life

பிசாசு 2 படத்தில்: பிசாசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். இதில், ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இப்படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருந்தார். ஆனால், அந்த காட்சியை நீக்கி விட்டதாக இயக்குநர் மிஷ்கின் கூறியிருந்தார்.

actress andrea Jeremiah Talks about her marriage life

அந்த வயதை கடந்துவிட்டேன்: இந்நிலையில், யூடியூப் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நடிகை ஆண்ட்ரியா, கல்யாணத்தை பற்றிய கேள்விக்கு, எல்லாருக்குமே ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதுவும் எனக்கு 30 வயதை எட்டியவுடன் அதுதான் தோன்றியது. ஆனால் இப்பொழுது அந்த எண்ணமே எனக்கு வரவில்லை. அந்த வயசையும் தாண்டி விட்டேன். மேலும் இப்படி இருக்கிறதால் எனக்கு எந்த சோகமும் இல்லை. திருமணமாகி சில பேர் சந்தோஷம் இல்லாமலும் இருக்கிறார்கள்.அதற்கு திருமணமாகாமலேயே சந்தோஷமாக இருந்து விடலாம்.அதனால் இப்போதைக்கு திருமணம் பற்றி எந்த ஐடியாவும் இல்லை என ஆண்ட்ரியா கூறியிருக்கிறார். ஆண்ட்ரியாவிற்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறியதை கேட்டு ரசிகர்கள் சோககீதம் பாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X