மாதக்கணக்காய் ஆயுர்வேத சிகிச்சை.. ஆண்ட்ரியாவுக்கு அப்படி என்ன கடுமையான மன அழுத்தம்?

Recommended Video

MeeToo Andrea : ஆண்ட்ரியாவை கொடுமைப்படுத்திய நடிகர்- வீடியோ

சென்னை: நடிகை ஆண்ட்ரியாவுக்கு கடுமையாக மன அழுத்தம் ஏற்பட்டு மாதக்கணக்காய் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா தமிழ் சினிமாவுக்கு பாடகியாக அறிமுகமானார். பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களின் மூலம் நடிகையாக என்ட்ரி கொடுத்தார்.

ஆண்ட்ரியா நடிப்பில் கடந்த ஆண்டு விஸ்வரூபம் - 2, வட சென்னை ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அதற்கு பிறகு ஆண்ட்ரியா புதிய படங்களில் கமிட்டாகவில்லை.

ஒதுங்கிவிட்டாரா?

ஒதுங்கிவிட்டாரா?

இதனால் அவருக்கு என்ன ஆனது? ஆண்ட்ரியா சினிமாவைவிட்டு ஒதுங்கிவிட்டாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தனக்கு என்ன ஆனது என்பது குறித்து ஆண்ட்ரியா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மனரீதியாக பாதிப்பு

மனரீதியாக பாதிப்பு

அதாவது, தனக்கு இருந்த மன அழுத்தம், உடல் மற்றும் மனரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன்காரணமாகவே சில காலம் நடிப்பில் இருந்து விலகியிருந்ததாக கூறியுள்ளார்.

சிகிச்சை கஷ்டம்

சிகிச்சை கஷ்டம்

இந்த பிரச்சனையில் இருந்து விடுபட ஆயுர்வேத சிகிச்சை எடுத்ததாகவும். காபி குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாக இருந்த தனக்கு ஆயுர்வேத சிகிச்சை எடுப்பது கஷ்டமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பலவீனமான இதயம்

பலவீனமான இதயம்

இருப்பினும் பிரச்சனை தீர கஷ்டப்பட்டு மருத்துவமுறையை பின்பற்றியதாகவும் கூறியுள்ளர் ஆண்ட்ரியா. அந்த சிகிச்சை முறை பலவீனமான இதயம் உள்ளவர்களால் கடைப்பிடிக்க முடியாது.

மருத்துவர்கள் ஆலோசனை

மருத்துவர்கள் ஆலோசனை

எனக்கு சிகிச்சை பெறுவது மிகவும் கஷ்டமாக இருந்ததால் சிகிச்சையின்போது அங்கிருந்து வெளியேறி விட நினைத்தேன். ஆனாலும் அந்த உணர்வில் இருந்து மீண்டு மருத்துவர்கள் ஆலோசனையை பின்பற்றி நடந்தேன் என்றும் கூறியுள்ளார் ஆண்ட்ரியா.

என்ன காரணம்?

என்ன காரணம்?

தற்போது தன்னை புதிதாக உணரமுடிகிறது என்று கூறியுள்ள ஆண்ட்ரியா, தனக்கு சிகிச்சையளித்த மருத்துவ குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.ஆனால் அவருடைய மன அழுத்தத்திற்கு காரணம் என்ன என்று அவர் தெரிவிக்கவில்லை.

லிப் லாக் புகைப்படங்கள்

லிப் லாக் புகைப்படங்கள்

ஒரு வழியாக மீண்டு வந்து விட்டார் ஆண்ட்ரியா. முன்னதாக தன்னை விட வயதில் சிறியவரான இசையமைப்பாளர் அனிருத்துடன் நெருக்கமாக இருந்த மற்றும் லிப் லாக் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X