என்னம்மா ஒர்க்கவுட் பண்றாங்க நம்ம ஆண்ட்ரியா!
சென்னை : தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளில் நடித்து இப்பொழுது முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை ஆண்ட்ரியா
தரமணி, வடசென்னை உள்ளிட்ட படங்களில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்தவர் இப்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு இரண்டில் பிஸியாக நடித்து வருகிறார்
கதாநாயகியாக நடித்து வரும் அதேசமயம் குணச்சித்திர வேடங்களிலும் ஆண்ட்ரியா நடித்து வர இப்பொழுது ஜிம்மில் அழகாக ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

போல்டான கதாபாத்திரத்தில்
சிறந்த பாடகியாக சினிமாவில் அறிமுகமாகி இப்போது வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் முத்திரை பதித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தரமணி திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்திலும் செம போல்டான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை
ஆண்ட்ரியாவின் கேரியரிலேயே வடசென்னை மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது என்றே சொல்லலாம் அதில் இவரது கதாபாத்திரம் சரோஜா இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அரண்மனை3l வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்த ஆண்ட்ரியா கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையும் கேட்டு வருகிறார். அந்த வகையில் கா மற்றும் நோ என்ட்ரி ஆகிய படங்களில் லீட் ரோலில் நடித்து வருகிறார்

பிசாசு 2
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்பொழுது அதன் தொடர்ச்சியாக பிசாசு பாகம் 2 தயாராகிறது. வழக்கமான பேய் கதைகளை விடவும் மிகவும் வித்தியாசமாகவும் பேய்களை தேவதையாகவும் காட்டிய இயக்குனர் மிஷ்கின் பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியாவை கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளார். பிசாசு 2 படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து தயாரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி, பூர்ணா, சார்பட்டா பரம்பரை சந்தோஷ் பிரதாப்,அஜ்மல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
Recommended Video

ஜிம்மில் ஒர்க்கவுட்
சமீபத்தில் எகிப்து நாட்டிற்கு சென்று ஜாலியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டது வைரலானது. இந்த நிலையில் ஆண்ட்ரியா ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் ஆண்ட்ரியா மிக அதிக கவனம் செலுத்தி வருகிறார் . உடற் பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றை தவறாமல் செய்து வரும் ஆண்ட்ரியா இப்போது ஜிம்மில் அழகாக ஒர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











