Andrea: நாங்க புடவையிலும் டாப்புதான்.. அழகான சிரிப்புடன் ரசிகர்களை வசீகரித்த ஆண்ட்ரியா!
சென்னை: நடிகை ஆண்ட்ரியா தொடர்ந்து பல ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி பாடகியாக, நடிகையாக, டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பல்வேறு தளங்களில் பயணித்து ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக உள்ளார். சர்வதேச அளவில் நடக்கும் பல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை தன்னுடைய அழகான மற்றும் யூனிக்கான பாடல்களால் கவர்ந்து வருகிறார் ஆண்ட்ரியா.
அடுத்ததாக ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. கவினுடன் இணைந்து வில்லியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக அடுத்தடுத்த போஸ்ட்களை பதிவு செய்து வருகிறார் ஆண்ட்ரியா. மாடர்ன் ட்ரஸ்ஸில் மட்டுமில்லாமல் புடவைகளிலும் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நடிகை ஆண்ட்ரியா: நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா தொடர்ந்து பல ஆண்டுகளை கடந்து நடிகையாகவும் முன்னணி பாடகியாகவும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பல்வேறு தளங்களில் பயணித்து வருகிறார். அனைத்திலுமே தான் பெஸ்ட் என்பதை அவர் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். முன்னதாக வடசென்னை, அரண்மனை உள்ளிட்ட படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள ஆண்ட்ரியா நடிப்பில் அடுத்ததாக பிசாசு 2 உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அடுத்ததாக கவினுடன் இணைந்து வில்லியாக நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. சமூக வலைதளங்களிலும் மிகவும் பிஸியாக காணப்படுகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்: அடுத்தடுத்து தன்னுடைய வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள், தான் பங்கேற்கும் இசைக்கச்சேரிகள் உள்ளிட்டவை குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆண்ட்ரியா பகிர்ந்து வருகிறார். இது மட்டுமில்லாமல் அடுத்தடுத்து போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களையும் வெளியிட்டு ஏராளமான ரசிகர்களின் லைக்ஸ்களை அள்ளிவருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆண்ட்ரியாவை 3.4 மில்லியன் ஃபாலோயர்கள் பின்தொடர்ந்து வரும் நிலையில், அடுத்தடுத்த பதிவுகளால் மாஸ் காட்டி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு உள்ளாடை கூட போடாத டாப்சில் ஆண்ட்ரியா வெளியிட்டிருந்த புகைப்படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து லைக்ஸ்களை குவித்தது.
புடவையில் போட்டோஷுட்: இந்நிலையில் அதற்கு முற்றிலும் மாற்றாக தற்போது புடைவையில் பாந்தமாக போஸ் கொடுத்து போட்டோஷுட்டை எடுத்துள்ளார் ஆண்ட்ரியா. மெல்லிய புன்னகையுடன் அவர் சைட் போஸில் எடுத்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கலந்துள்ளன. இந்தப் புகைப்படங்களில் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் மூக்குத்தியும் அணிந்து போஸ் கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா. புன்னகையுடன் வெட்கத்தையும் இணைத்து இந்தப் புகைப்படங்களில் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.
அடுத்தடுத்த படங்கள்: 40 வயதை நெருங்கிய நிலையிலும் தன்னுடைய லுக்கால் ஏராளமான ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார் ஆண்ட்ரியா. நயன்தாராவின் அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள மனுஷி படமும் மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றுள்ளது. படம் ஆண்ட்ரியாவை மையப்படுத்தியே உருவாகியுள்ளது. முன்னதாக வெளியான படத்தின் ட்ரெயிலர் மிகப்பெரிய அளவில் ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











