கையில் சரக்கு கிளாஸ்..டப்பாத்தில் படுத்து கொண்டு போஸ் கொடுத்த பிரபல நடிகை !

சென்னை : இனிமையான குரலின் மூலம் நம் அனைவரையும் மெய்மறக்க வைத்தும், அழகான நடிப்பின் மூலம் நம் அனைவரையும் ரசிக்க வைத்தும் வருபவர் நடிகை ஆண்ட்ரியா.

தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் பல பாடல்களை பாடியுள்ள இவர் அதேசமயம் பல்வேறு படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் சரக்குடன் பாத்ரூமில் படுத்துக்கிடக்கும் ஸ்டைலிஷ் புகைப்படம் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.

தனித்துவமான கதாபாத்திரம்

தனித்துவமான கதாபாத்திரம்

நடிகை ஆண்ட்ரியா தமிழ் மற்றும் மலையாளம் உட்பட பல மொழிகளில் பாடகியாகவும் நடிகையாகவும் தற்போது வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடித்து வெளியான விஸ்வரூபம், தரமணி போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று இவரின் ஒவ்வொரு படங்களும் தனித்துவமான கதாபாத்திரங்களின் மூலம் மிகவும் பேசப்பட்டு வருவதால் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதைகளையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.

கண்ட நாள் முதல்

கண்ட நாள் முதல்

பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான கண்ட நாள் முதல் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய ஆண்ட்ரியா பிறகு பாடகியாக மிகவும் பிரபலமாகி பல மேடைகளில் பல்வேறு பாடல்களைப் பாடி மிகவும் பிரபலமானார். இவ்வாறு பாடகராக வலம்வந்த ஆண்ட்ரியாவுக்கு இவரின் வசீகரிக்கும் குரலுக்காகவே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இன்றுவரை இருந்து வருகிறது.

கொள்ளை அழகு

கொள்ளை அழகு

இந்நிலையில் இவரது குரல் எந்த அளவுக்கு அழகோ அதே போன்று இவரும் பார்க்க கொள்ளை அழகு கொண்டிருப்பதால் கதாநாயகியாகவும் களமிறங்கினார். தமிழில் மிகப் பிரபலமான இயக்குனரான கெளதம் வாசுதேவ் மேனன் சரத்குமாரை வைத்து இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ஆண்ட்ரியா இன்று வரை பல்வேறு படங்களில் நடித்து தனது தனித்துவமான நடிப்பாலும், பாடல்களாகும் பலரையும் கவர்ந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

காத்துக் கொண்டிருக்கும்

காத்துக் கொண்டிருக்கும்

ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் பாடகியாகவும் நாயகியாகவும் வெற்றிகரமாக வலம் வரும் ஆண்ட்ரியாவின் நடிப்பில் மாஸ்டர் மற்றும் கா போன்ற திரைப்படங்கள் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கையில் சரக்குடன்

கையில் சரக்குடன்

எப்பொழுதும் துருதுருவென இருக்கும் புகைப்படங்களையும், கொள்ளை கொள்ளும் கவர்ச்சி கடலிலும் நம் அனைவரையும் நீந்த விடும் ஆண்ட்ரியா தற்போது, பாத்ரூமில் குளிக்கும் தொட்டியில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஹாயாக படுத்துக்கொண்டு ஒரு கையில் சரக்குடன் அழகு மெச்சும் கண்கவர் சிகப்பு நிற ஆடையில் அழகு ததும்ப போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X