Actress Andrea: உங்களை நேசிக்க கத்துக்கோங்க.. ஆண்ட்ரியாவின் வாழ்க்கைப்பாடம்!

சென்னை: நடிகை ஆண்ட்ரியா நடிகை, பாடகி, டப்பிங் ஆர்டிஸ்ட் என அடுத்தடுத்த தளங்களில் சினிமாவில் தன்னுடைய பயணத்தை விரிவுபடுத்தி வருகிறார். மேலும் சர்வதேச அளவில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளிலும் இவரை அதிகமாக காண முடிகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஆண்ட்ரியா தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்த பதிவுகளை கொடுத்து வருகிறார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இசை நிகழ்ச்சிகள் குறித்த வீடியோக்கள், வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து வருகிறார் ஆண்ட்ரியா. இவரை instagram பக்கத்தில் 3.3 மில்லியன் பாலோயர்கள் பின்பற்றி வருகின்றனர்.இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்த போஸ்ட்களை ஆண்ட்ரியா பதிவிட்டு வருகிறார்.

Andrea Pisasu 2 movie Instagram tamil cinema

நடிகை ஆண்ட்ரியா: நடிகை ஆண்ட்ரியா அடுத்தடுத்து தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நாயகியாக நடித்து சினிமாவில் என்ட்ரியான ஆண்ட்ரியா, தொடர்ந்து அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாடகியாக தன்னுடைய பயணத்தை துவங்கிய ஆண்ட்ரியா, தொடர்ந்து பாடகி, நடிகை, டப்பிங் ஆர்டிஸ்ட் என தன்னுடைய தளங்களை விரிவு படுத்திக் கொண்டார். இதைக் காட்டிலும் அடுத்தடுத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளில் இவர் அதிகமாக பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இசை நிகழ்ச்சிகள்: மேடை ஏறிவிட்டால் ஆண்ட்ரியாவிற்கு எங்கிருந்துதான் அந்த உற்சாகம் வருமோ தெரியவில்லை, ரசிகர்களை அடுத்தடுத்து கேள்விகளால் தன்னுடைய பாடலை ரசிக்கவும் செய்வார். இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் ஆண்ட்ரியா தொடர்ந்து ஆக்டிவாக இருப்பதை பார்க்க முடிகிறது. அடுத்தடுத்து ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள், தன்னுடைய வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் புகைப்படங்கள் என தொடர்ந்து போட்டோக்களையும் தன்னுடைய இசை நிகழ்ச்சிகளுக்கான வீடியோக்களையும் பகிர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஆண்ட்ரியா.

இன்ஸ்டாகிராம் பதிவு: அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ள ஆண்ட்ரியா, 10 ஆண்டுகள் இடைவெளியில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்களில் ஷார்ட்ஸ் அணிவது குறித்த தன்னுடைய விருப்பத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் உங்களை நேசிக்க கற்றுக் கொள்வது குறித்த விட்னி ஹூஸ்டனின் வரிகள் தனக்கு வாழ்க்கை பாடத்தை கடந்த 10 ஆண்டுகளில் கற்றுக் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்ததாக ஆண்ட்ரியா நடிப்பில் விக்னேஷ் சிவனின் பிசாசு 2 படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

அடுத்தடுத்த படங்கள்: பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடித்துள்ள நிலையில் நீண்ட காலங்களாக இந்த படம் ரிலீசுக்கு தவித்து வருகிறது. இதனிடையே, கா, மனுஷி போன்ற படங்களிலும் ஆண்ட்ரியா. லீட் கேரக்டர்களில் நடித்துள்ளார். அழுத்தமான கேரக்டர்களில் தொடர்ந்து நடித்து வரும் ஆண்ட்ரியா ஹீரோக்களுடன் இணைந்து டூயட் பாடுவது மட்டும் நடிப்பில்லை என்பதை சிறப்பாக புரிந்து கொண்டுள்ளார். அவரது படங்களிலும் இதை வெளிப்படுத்தி வருகிறார். சமூக வலைதளங்களிலும் தன்னுடைய அடுத்தடுத்த பதிவுகளை வெளியிட்டு மாஸ் காட்டி வருகிறார். தற்போது பாரிஸில் சுற்றுப்பயணத்தில் உள்ள ஆண்ட்ரியா கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X