Actress Andrea: நான் அரசியல்ல எல்லாம் என்ட்ரி ஆகமாட்டேன்.. நடிகை ஆண்ட்ரியா ஸ்ட்ராங்க்!

புதுச்சேரி: நடிகை ஆண்ட்ரியா பாடகியாகவும் நடிகையாகவும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பல்வேறு தளங்களில் சிறப்பாக பயணம் செய்து வருகிறார். சர்வதேச அளவில் பல்வேறு இசை கச்சேரிகளில் பங்கேற்று ஆடலுடன் கூடிய பாடலை கொடுத்து ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

40 வயதை நெருங்கிய நிலையிலும் தன்னுடைய பிட்னசையும் கவர்ச்சியையும் சிறப்பாக மெயின்டெயின் செய்து வரும் ஆண்ட்ரியா புதுச்சேரியில் நகைக்கடை திறப்பு ஒன்றில் பங்கேற்று அனைவரையும் அசத்தினார். அப்போது பாலிடிக்ஸ் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ஆண்ட்ரியா.

Vijay Andrea tamil cinema

நடிகை ஆண்ட்ரியா: நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகம் ஆகி தொடர்ந்து நடிகை, டப்பிங் ஆர்டிஸ்ட் என பல்வேறு தளங்களில் தன்னை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக தொடர்ந்து நடைபோட்டு வருகிறார். துவக்க காலத்தில் இவர் நடிப்பில் வெளியான வடசென்னை உள்ளிட்ட படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது. தன்னுடைய அழுத்தமான நடிப்பால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றிருந்தார்ஆண்ட்ரியா. பாடகியாகவும் ஊ சொல்றியா மாமா உள்ளிட்ட பல அதிரடி பாடல்களையும் மெலடி பாடல்களையும் பாடி அசத்தி வருகிறார்.

சூப்பர்ஹிட் பாடல்கள்: தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார் ஆண்ட்ரியா. டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பல முன்னணி நடிகைகளுக்கும் இவர் வாய்ஸ் கொடுத்து வருகிறார். 40 வயதை நெருங்கிய நிலையிலும் ஆண்ட்ரியா தொடர்ந்து தன்னுடைய ஃபிட்னஸை மிகச் சிறப்பாக பராமரித்து வருகிறார். இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் இவரது உடல் கட்டு மற்றும் கவர்ச்சி ஆகியவை ரசிகர்களை தொடர்ந்து கட்டிப்போட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் சர்வதேச அளவில் பறந்து பறந்து இவர் பாடல்களை பாடி வருகிறார்.

Vijay Andrea tamil cinema

சர்வதேச இசைக்கச்சேரிகள்: இந்த இசைக்கச்சேரிகளில் நடனத்துடன் கூடிய இவரது பாடல்களுக்கு ரசிகர்கள் சொக்கிப் போகின்றனர். இதன் வீடியோக்களையும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு ஏராளமான ஃபாலோய்களையும் பெற்று வருகிறார் ஆண்ட்ரியா. இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் நகைக்கடை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆண்ட்ரியா அழகான பூ போன்ற லுக்கில் அனைவரையும் கவர்ந்துள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களையும் சந்தித்த ஆண்ட்ரியா, விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு பாராட்டுகளையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளார்.

நோ அரசியல் என்ட்ரி: ஆனால் தான் எந்த காலத்திலும் அரசியலில் என்ட்ரி கொடுக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஆசைப்பட்டு நடிக்க விரும்பும் கேரக்டர் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆண்ட்ரியா தான் இதுவரை நடித்த படங்களிலேயே ஹாரர், திரில்லர், லவ் ஸ்டோரி என தனது மனதிற்கு நெருக்கமான பல படங்களில் நடித்துள்ளதாகவும் புதிதாக தான் செய்வதற்கு எந்த கேரக்டரும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வட சென்னை 2 குறித்து இயக்குனர் வெற்றிமாறனிடம் தான் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் வடசென்னை 2 படம் உருவானால் அதில் நடிக்க தான் ஆர்வமாக உள்ளதாகவும் ஆண்ட்ரியா தொடர்ந்து பேசியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பாடலையும் பாடி ரசிகர்களை அவர் கவர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X