Actress Andrea: சமந்தா வழியில் ஆண்ட்ரியா.. என்ன இப்படி இறங்கிட்டாங்க!

சென்னை:நடிகை சமந்தா அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்தவர். பல ஆண்டுகளை கடந்து இவரது வெற்றிப் பயணம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தொடர்ந்து வருகிறது. தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள சமந்தா தெலுங்கிலும் நாக சைத்தன்யா, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய கணவரை பிரியம் முடிவை வெளியிட்டு இருந்த சமந்தா, மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோய் பாதிப்பிலும் அவஸ்தைப்பட்டு வந்தார்.

இதனிடையே படங்களில் நடிப்பதில் இருந்தும் அவர் சில மாதங்களாக விலகி இருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டில் அவரது குஷி படம் வெளியானது. அடுத்ததாக சிட்டாடல் இந்திய பதிப்பும் ரிலீசாகவுள்ளது. இதனிடையே தன்னுடைய நோய் பாதிப்பிற்காக வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுவந்த சமந்தா மீண்டும் படங்களில் கவனம் செலுத்தவுள்ளார். இதையொட்டி அவர் கதைகளை கேட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக காணப்படும் சமந்தா, தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நீச்சல் உடையில் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Actress Andrea released the swimming dress photo in her instagram as like Samantha

நடிகை சமந்தா: நடிகை சமந்தா தன்னுடைய அரியவகை நோய் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகியிருந்தார். ஆயினும் சமூக வலைதளங்கள் மூலமாக தன்னுடைய ரசிகர்களுடன் தொடர்ந்து டச்சில் இருந்து வந்தார். அடுத்தடுத்து ஒர்க் அவுட் வீடியோக்கள், வெளிநாட்டு சுற்றுலா வீடியோக்கள், போட்டோசூட் புகைப்படங்கள் என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை அவர் பிஸியாகவே வைத்திருந்தார். இந்த காரணங்களால் அவரை இன்ஸ்டாகிராமில் தற்போது 32.4 மில்லியன் பாலோயர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

நீச்சல் உடையில் சமந்தா: தன்னுடைய அரியவகை நோய் பாதிப்பு காரணமாக நடிக்காமல் இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். மீண்டும் நடிக்கும் ஆர்வத்தில் உள்ள சமந்தா பட வாய்ப்புகளை கவரும் வகையில் இத்தகைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இவ்வளவு மோசமாகவா சமந்தா இறங்க வேண்டும் என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

Actress Andrea released the swimming dress photo in her instagram as like Samantha

சமந்தா வழியில் ஆண்ட்ரியா: இது இப்படி இருக்க நடிகை ஆண்ட்ரியாவும் சமந்தா வழியில் தற்போது தன்னுடைய நீச்சல் உடை புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவருக்கும் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் அவரும் பட வாய்ப்புகளை கவரும் வகையில் இதுபோல அடுத்தடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆண்ட்ரியா பின்னணி பாடகியாகவும் உள்ள நிலையில் அடுத்தடுத்து அவரது குரலில் ஹிட் பாடல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இசை விழாக்களிலும் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். வெளிநாடுகளிலும் அவரது இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கொண்டாட்டத்தில் ரசிகர்கள்: ஆண்ட்ரியா இதன் மூலம் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உரியவராக இருக்கிறார். ஆண்ட்ரியாவும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர். தன்னுடைய இசை நிகழ்ச்சிகள், படங்கள் குறித்த தகவல்களையும் அடிக்கடி வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா, போட்டோஷூட்களை எடுத்து அதன் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள நீச்சல் உடை புகைப்படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X