twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆண்ட்ரியாவின் கதை தான் என்கேபி அபிராமியின் கதாபாத்திரமா.. "அந்த" சம்பவங்களின் தொகுப்பா இது?

    நேர்கொண்ட பார்வை படத்தின் அபிராமி கதாபாத்திரம் நடிகை ஆண்ட்ரியாவின் நிஜ வாழ்க்கை சம்பவங்களை ஒத்து இருக்கிறது.

    |

    Recommended Video

    MeeToo Andrea : ஆண்ட்ரியாவை கொடுமைப்படுத்திய நடிகர்- வீடியோ

    சென்னை: அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் அபிராமி கதாபாத்திரம் சந்தித்த பிரச்சினைகளைத்தான் நிஜ வாழ்க்கையில் நடிகை ஆண்ட்ரியா அனுபவித்திருக்கிறார்.

    நடிகை ஆண்ட்ரியா மன அழுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார். பல மாதங்களாக இந்த சிகிச்சையை அவர் தொடர்ந்து வருகிறார்.

    மாதக்கணக்காய் சிகிச்சை எடுக்கும் அளவுக்கு ஆண்ட்ரியாவுக்கு அப்படி என்ன மன அழுத்தம் என ரசிகர்கள் கவலைப்பட்டனர். இதுகுறித்து பெங்களூருவில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் பங்கேற்ற ஆண்ட்ரியாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    திருமணமானவருடன் தவறான உறவு வைத்திருந்தேன்.. உடலளவில் காயப்படுத்தினார்.. நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக்! திருமணமானவருடன் தவறான உறவு வைத்திருந்தேன்.. உடலளவில் காயப்படுத்தினார்.. நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக்!

    தவறான உறவு

    தவறான உறவு

    அதற்கு பதிலளித்த அவர், திருமணமான ஒரு நபருடன் தான் தவறான உறவு வைத்திருந்ததாகக் கூறினார். மேலும், அந்த நபர் தன்னை உடலளவில் மிகவும் காயப்படுத்தியதாகவும், நான் செய்த தவறால் தன் வாழ்க்கையே இருண்டு போய்விட்டது என்று கூறியிருந்தார். அதனை வெளிப்படுத்தும் வகையில் முறிந்த சிறகுகள் எனும் கவிதை நூலை எழுதியதாக ஆண்ட்ரியா குறிப்பிட்டிருந்தார்.

    ஆண்ட்ரியாவின் கதை

    ஆண்ட்ரியாவின் கதை

    ஆண்ட்ரியாவின் இந்த கதையை கேட்கும் போது நேர்கொண்ட பார்வை படத்தில் வரும் அபிராமியின் கதாபாத்திரம் தான் நினைவுக்கு வருகிறது. அந்த படத்தில் அவரது பெயர் பெமிதா. தந்தை இறந்துவிட்ட நிலையில் தாயையும், மனநலம் பாதிக்கப்பட்ட தம்பியையும் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பெமிதாவுக்கு இருக்கிறது.

    நேர்கொண்ட பார்வை பெமிதா

    நேர்கொண்ட பார்வை பெமிதா

    பெமிதா, அவருடன் வயதில் மூத்த (அதிக வயது வித்தியாசமுடைய), ஏற்கனவே திருமணமான ஒருவருடன் உறவு வைத்திருப்பார். படத்தில் இதை அவரது எதிரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வர். இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாவார் பெமிதா.

    பிங்கில் இல்லை

    பிங்கில் இல்லை

    நேர்கொண்ட பார்வை படத்தின் ஒரிஜினலான பிங்க் படத்தில் பெமிதா கதாபாத்திரம் இந்த அளவுக்கு விவரிக்கப்பட்டிருக்காது. ஆனால் தமிழில் இயக்குனர் வினோத் இதனை மிகவிரிவாக காட்டி உள்ளார். தற்போதைய சூழலில் இளம் பெண்கள் அதிக வயதுடைய ஆண்களுடன் லிவிங்டூகெதர் உறவுமுறை கொள்வது அதிகரித்து வருவதை உணர்த்துவதற்காக, இந்த டீடெயிலிங்கை அவர் செய்திருக்கிறார்.

    ஒரே கதை

    ஒரே கதை

    எனவே ஆண்ட்ரியாவின் கதையை கேட்டதும், நேர்கொண்ட பார்வையில் அபிராமியின் கதாபாத்திரம் நினைவுக்கு வருவது தவறில்லை தானே. அதுவும் நேற்று தான் படம் ரிலீசாகியுள்ள நிலையில், அதே நாளில் ஆண்ட்ரியாவின் கதையும் வெளியாகி இருப்பது மிக இயல்பாக பொருந்துகிறது.

    English summary
    Like a coincidence, actress Andrea's life story is similar to character of Abirami in Ajith's Nerkonda Parvai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X