Andrea :பேக்லெஸ் உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்த ஆன்ட்ரியா.. என்னா பார்வைடா!

சென்னை : நடிகை ஆன்ட்ரியா எப்போதுமே அதிரடியான படங்கள், அதிரடியான புகைப்படங்கள், அதிரடியான கருத்துக்கள் என ரசிகர்களை கவர்ந்து வருபவர்.

அடுத்ததாக இவரது நடிப்பில் பிசாசு 2 படம் ரிலீசாகவுள்ள நிலையில், அந்தப் படத்தில் நிர்வாணமாக அவர் நடித்துள்ளதாக கூறப்பட்டது.

சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஆன்ட்ரியா, தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

நடிகை ஆன்ட்ரியாவின் புதிய பதிவு : நடிகை ஆன்ட்ரியா அடுத்தடுத்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். பச்சைக் கிளி முத்துச்சரம் படத்தில் துவங்கிய ஆன்ட்ரியாவின் பயணம், தற்போது பிசாசு 2, மனுஷி ஆகிய படங்களில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஆன்ட்ரியா. தன்னுடைய கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் இல்லாத கேரக்டர்களில் இவர் நடிப்பதில்லை. அடுத்ததாக வெற்றிமாறன் -தனுஷ் கூட்டணியில் வடசென்னை 2 படம் உருவாகவுள்ள நிலையில், அந்தப் படத்திலும் இவர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actress Andreas new photoshoot picutres in Backless makes fans stunning

அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் ஆன்ட்ரியா, பிசாசு 2 படத்தில் மிகச்சிறப்பான கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அந்த வகையில் படத்தில் ஆன்ட்ரியா நிர்வாணமாக நடித்திருந்ததாகவும் ஆனால் அந்தக் காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் முதல் பாகம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்ற நிலையில், இரண்டாவது பாகமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஆன்ட்ரியா. தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சித் தூக்கலான புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தனது இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்த தகவல்களையும் அதன் புகைப்படங்கள், வீடியோக்களையும் ஆன்ட்ரியா பகிர்ந்து வருகிறார். வெளிநாடுகளில் நடத்தப்படும் ஆன்ட்ரியாவின் இசை நிகழ்ச்சிகளை பார்க்க முடியாதவர்களுக்கு இதன்மூலம் அவர் சிறப்பான அனுபவத்தை கொடுத்து வருகிறார்.

அதிரடியான படங்கள், அதிரடியான கருத்துக்களுக்கு சொந்தக்காரராக இருக்கும் ஆன்ட்ரியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து அதிரடியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். தொடர்ந்து ட்ரவுசர்ஸ் உள்ளிட்டவற்றை அணிந்து பட்டையை கிளப்பி வருகிறார். கடந்த பெண்கள் தினத்தின்போது பேக்லெஸ் உடையில் புகைப்படம் வெளியிட்டு அனைவரையும் முகம் சுளிக்க வைத்தார். அவர் இந்தப் படத்தின் மூலம் பெண் சுதந்திரத்தை வலியுறுத்துகிறாரா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் பேக்லெஸ் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு அதிரடி கிளப்பியுள்ளார் ஆன்ட்ரியா. தன்னுடைய முன்னால் இருக்கும் பாகங்களை துணியால் மறைத்துள்ள ஆன்ட்ரியா, பின்பக்கத்தை அப்படியே விட்டுள்ளார். இது முன்னதாக வெளியான புகைப்படத்தின் தொடர்ச்சியாகவே காணப்படுகிறது. இந்தப் புகைப்படங்கள் வாரயிறுதியின் கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படங்களில் மிகவும் அழுத்தமான பார்வையை ஆன்ட்ரியா வெளிப்படுத்தியுள்ளார்.

Actress Andreas new photoshoot picutres in Backless makes fans stunning

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துவரும் ஆன்ட்ரியா, தொடர்ந்து தமிழில் அனல்மேலே பனித்துளி, வட்டம், கா, நோ என்ட்ரி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இநத்ப் படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படங்களிலும் தொடர்ந்து பாடி வருகிறார். சமீபத்தில் புஷ்பா படத்தில் இவர் பாடியிருந்த ஊ சொல்றியா மாமா பாடல் மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X