எனக்கு சென்டிமென்ட்ஸ்லாம் கிடையாது.. ஆனா அதை எல்லா நாளுமே செய்யனும்.. நடிகை ஆண்ட்ரியா அதிரடி!

சென்னை: தனக்கு சென்டிமென்ட்ஸ்லாம் கிடையாது என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்திருக்கிறார்.

Recommended Video

Money Heist | Tamil Cast | Netflix | Series | Review | The Professor

கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஆண்ட்ரியா. கண்ட நாள் முதல் என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.

அதனை தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் லீடிங்க ரோலில் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.

பெரும் பாதிப்பு

பெரும் பாதிப்பு

பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா, சினிமாவில் மட்டுமின்றி மேடை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அண்மையில் புரோக்கன் விங்ஸ் என்ற தலைப்பில் கவிதை வெளியிட்டார் ஆண்ட்ரியா. மேலும் திருமணமான நபர் ஒருவருடன் கொண்ட தொடர்பால் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெரும் பாதிப்புக்கு ஆளானதாகவும் கூறினார்.

மீண்டும் சினிமாவில்

மீண்டும் சினிமாவில்

இதனால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யார் அந்த நபர் என்ற சர்ச்சையும் எழுந்தது. கிட்டதட்ட ஓராண்டாக படங்களில் நடிக்காமல் சிகிச்சை பெற்று வந்த ஆண்ட்ரியா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

அன்னையர் தினம்

அன்னையர் தினம்

விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. கடந்த மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய இந்தப் படம் லாக்டவுனால் இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது. இந்நிலையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது தயாருடன் இருக்கும் போட்டோ ஒன்றை ஷேர் செய்தார்.

அம்மா சொன்னதால்..

அம்மா சொன்னதால்..

அதில் நேற்று என் அம்மா இந்த போட்டோவை எனக்கு அனுப்பி அன்னையர் தினத்தில் இந்த போட்டோவை நீ போஸ்ட் செய்யலாம், நாம் இருவருமே நல்லா இருக்கோம் என்றார். அதனால் இந்த போட்டோவை நான் இங்கு ஷேர் செய்கிறேன்.

சென்டிமென்ட்ஸ் இல்லை

சென்டிமென்ட்ஸ் இல்லை

சென்டிமென்ட்ஸ்கெல்லாம் நான் ஆளில்லை, ஆனால் எல்லா அம்மாக்களும் ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் அடிக்கடி கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஆகையால் அன்னையர் தின வாழ்த்துகள் இன்றும் மற்றும் எல்லா நாட்களும் என குறிப்பிட்டுள்ளார்.

லாக்டவுன் குறும்படம்

லாக்டவுன் குறும்படம்

அனைவரையும் போலவே தனது லாக்டவுன் நாட்களை வீட்டில் கழித்து வருகிறார் ஆண்ட்ரியா. இருப்பினும், அவர் மியூஸிக் மற்றும் குறும்படங்களில் பிஸியாக இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு, அவர் புதிய சிங்கிள் ஒன்றை ரிலீஸ் செய்தார். முன்னதாக லாக் டவுனின் போது, ஆதவ் கண்ணதாசன் இயக்கிய ‘லாக் டவுன்' என்ற குறும்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X