11 வயதில் பாலியல் தொல்லை.. பேருந்தில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்த ஆண்ட்ரியா!

சென்னை: தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இப்போது பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர், கமல் ஹாசனுடன் இணைந்து விஸ்வரூபம் படத்தில் நடித்தார். இப்போது பிஸியான நடிகையாக இருக்கும் ஆண்ட்ரியான தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

பாடகியான அறிமுகமான ஆண்ட்ரியா, அந்நியன் படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா, வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற கற்க கற்க, ஆதவன் படத்தில் இடம்பெற்ற ஏனோ ஏனோ உள்ளிட்ட பல பாடல்களை பாடி உள்ளார். பாடகியாக மட்டுமின்றி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் கலக்கி வருகிறார். அண்மையில் அவர் புஷ்பா படத்திற்காக பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் மூலம்,மூளை முடுக்கெல்லாம் பிரபலமானார் ஆண்ட்ரியா.

Actress Andrea shared a bitter childhood experience

நடிகை ஆண்ட்ரியா: தற்போது கணிசமான படங்களை கையில் வைத்துக்கொண்டு நடித்து வரும் ஆண்ட்ரியா, சமூதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.அதில், நானும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டு இருக்கிறேன். தெருவில் நடந்து போகும்போது, திடீரென பின்னால் வந்து என்னை தட்டி விட்டு செல்வார்கள், சில நேரம் எல்லை மீறுவார்கள். கலைநிகழ்ச்சிகளிலும் இவை நடக்கும். நாம் அதை உணர்ந்து திரும்பி பார்ப்பதற்குள் அவர்கள் அங்கிருந்து நகர்ந்து விடுவார்கள். இதை சாதாரணமான விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது.

11 வயதில் நடந்த கசப்பான சம்பவம்: எனக்கு 11 வயது இருக்கும் போது, நானும், எனது தந்தையும் பேருந்தில் சென்று கொண்டிருந்தோம். அப்போது நான் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்திருந்தேன். திடீரென ஒரு நபரின் கை எனது டி-ஷர்ட் உள்ளே வருவதை உ ணர்ந்து அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக அங்கிருந்து கொஞ்சம் முன்னாடி வந்து அமர்ந்துவிட்டேன். இந்த விஷயத்தை நான் அம்மா,அப்பாவிடம் சொல்லவில்லை. நான் ஏன் அதை என் பெற்றோரிடம் சொல்லவில்லை என்று எனக்கு தெரியவில்லை.

தவறை கண்டிக்க வேண்டும்: இந்த விஷயத்தைப் பற்றி எனது தந்தையிடம் சொன்னால் அதற்காக அவர் நடவடிக்கையை எடுத்திருப்பார். அதை நான் செய்யவில்லை. இந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று சொல்லக்கூடிய சமூகத்தால் வளர்க்கப்பட்டிருக்கிறோம். பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்லக்கூடாது என்று சொல்லக்கூடாது என்று தான் இந்த சமூதாயம் விரும்புகிறது. இதனால் தான் பாலியல் வன்கொடுமை நடக்கும்போதுதான் பதறுகிறார்கள். ஆரம்பத்திலேயே கண்டித்தால் எல்லை மீறல்கள் இருக்காது என்று நடிகை ஆண்ட்ரியா அந்த பேட்டியில் தெளிவாக பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X