துபாயிலிருந்து திண்டுக்கல் வரை.. ஆன்ட்ரியா செஞ்ச வேலையை பாருங்க!

சென்னை : நடிகை ஆன்ட்ரியா பாடகி, நடிகை என அடுத்தடுத்த களங்களில் சிறப்பாக தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் தன்னுடைய இசைக் கச்சேரிகளால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

அடுத்ததாக ஆன்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார்.

 நடிகை ஆன்ட்ரியா

நடிகை ஆன்ட்ரியா

நடிகை ஆன்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில்தான் தன்னுடைய சினிமா என்ட்ரியை நடிகையாக கொடுத்திருந்தார். முன்னதாக கண்ட நாள் முதல் படத்திலும் இவர் நடித்துள்ளார். பாடகியாக அறிமுகமான ஆன்ட்ரியா தன்னுடைய வசீகரமான குரலால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு சொந்தக்காரராக காணப்படும் ஆன்ட்ரியாவின் அழகு மற்றும் கவர்ச்சி அவருக்கு சினிமாவில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தொடர்ந்து அரண்மனை, ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், துப்பறிவாளன், வடசென்னை என தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார் ஆன்ட்ரியா. நடிப்பு, பின்னணி பாடகி என அடுத்தடுத்த திறமைகளை காட்டிவரும் ஆன்ட்ரியா டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் படங்களில் பணியாற்றியுள்ளார். கமாலினி முகர்ஜ், டாப்சி, எமி ஜாக்சன், இலியானா போன்ற நடிகைகளுக்கு தமிழில் இவர் குரல் கொடுத்துள்ளார்.

 ஆன்ட்ரியாவின் பிசாசு 2 படம்

ஆன்ட்ரியாவின் பிசாசு 2 படம்

ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக இவர் செயல்பட்டு வருகிறார். ஆன்ட்ரியா நடிப்பில் அடுத்ததாக அனல் மேலே பனித்துளி, பிசாசு 2 போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளன. இதில் பிசாசு 2 படம் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். முன்னதாக பிசாசு படம் வெளியாகி சிறப்பான வெற்றியை கொடுத்த நிலையில், பிசாசு 2 படமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களிலும் ஆன்ட்ரியா மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். கவர்ச்சித் தூக்கலான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். மகளிர் தினத்தையொட்டி அரை நிர்வாணத்தில் ஆன்ட்ரியா வெளியிட்ட புகைப்படம் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதனிடையே சமீபத்தில் புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட ஆன்ட்ரியா, இதுபோன்ற காஸ்ட்யூமில் தன்னை பார்க்கவே ரசிகர்கள் விருப்பம் தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

துபாய் டூ திண்டுக்கல்

துபாய் டூ திண்டுக்கல்

இதனிடையே தற்போது ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராமில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் துபாயிலிருந்து திண்டுக்கல் வரையில் தன்னுடைய நாட்கள் கடந்ததாக அவர் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். அதற்கு ஏற்றாற்போல, துபாயில் ஸ்டைலிஷ் புகைப்படங்களை எடுத்துள்ள ஆன்ட்ரியா, சூப்பரான உணவுகளின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து திண்டுக்கல்லில் மாட்டுடன் தான் இருக்கும்படியான புகைப்படத்தையும் அழகான இயற்கை சூழல்களையும் பகிர்ந்துள்ளார்.

உணவுகளை வெளுத்துக்கட்டும் ஆன்ட்ரியா

உணவுகளை வெளுத்துக்கட்டும் ஆன்ட்ரியா

துபாயிலும் இயற்கை சூழல்களை வெளியிட்டுள்ள ஆன்ட்ரியா, அதிகமான உணவுகளை வெளுத்துக்கட்டுவதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சிறப்பான உடல்நலத்தை மெயின்டெயின் செய்பவர் ஆன்ட்ரியா. ஆனால் இவ்வளவு உணவுகளுடன் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் நாய்க்குட்டி, மாடு போன்றவற்றுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இந்தப் பதிவில் வெளியிட்டுள்ளார் ஆன்ட்ரியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X