ரொம்ப நாளைக்கு பிறகு உங்களை இப்படி பார்க்கிறோம்.. ஆண்ட்ரியாவின் போட்டோவால் ஹேப்பியான ஃபேன்ஸ்!

Recommended Video

Master Movie Making | Andrea | Lokesh Kanagaraj | Malavika Mohanan

சென்னை: நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஹேப்பியாகியுள்ளனர்.

நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கு முன்பாக கண்ட நாள் முதல் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.

தவறான தொடர்பு

அதன்பிறகு படங்களில் அதிகம் படங்களில் தலைக்காட்டாமல் இருந்த நடிகை ஆண்ட்ரியா, அண்மையில் ஒரு கவிதை போட்டியில் பங்கேற்றார். அப்போது தான் திடீரென சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்தது ஏன் என்பது குறித்து கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது திருமணம் ஆன நடிகர் ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பே அதற்கு காரணம் என்றார்.

அடுத்தடுத்து படங்கள்

அந்த நபர் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறினார் ஆண்ட்ரியா. அதனால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீளவே இந்த இடைவெளி தேவைப்பட்டதாகவும் கூறினார். இந்நிலையில் மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ள ஆண்ட்ரியாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. கா, வட்டம், மாளிகை, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.

ஷுட்டிங் ஸ்பாட்

நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில நாட்களாய் தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் அப்டேட் செய்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் தொடை தெரிய கிளாமர் உடையில் ஸ்டேஜில் பாட்டுப்பாடிய வீடியோக்களை வெளியிட்டார். அதனை தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் போட்டோக்கள் மற்றும் மாஸ்டர் பட ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோக்கள் வைரலானது.

கல்யாணமா?

கல்யாணமா?

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா பச்சை நிற பட்டுப்புடவையில் ட்ரெடிஷ்னலாக எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் ரொம்ப நாளைக்கு பிறகு உங்களை இப்படி பார்க்கிறோம்.. மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளனர். சிலர் சேலையில் அழகாய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் பலர் உங்களுக்கு திருமணமா என்றும் வீட்டில் ஏதும் விசேஷமா என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X