லெப்டு ரைட்டு சென்டர்னு எப்படி பார்த்தாலும் அழகு அள்ளுதே.. ஆண்ட்ரியாவை வர்ணிக்கும் ரசிகர்கள் !

சென்னை : அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா. தற்பொழுது அனைவரும் பேசும் வகையில் பிரமாதமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா, அதேசமயம் கா என்ற ஆக்சன் திரைப்படத்திலும் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சி படுத்தி வரும் ஆண்ட்ரியா தற்பொழுது இன்ஸ்டாகிராமில் ஸ்லீவ்லெஸ் சட்டையில் பதிவிட்டுள்ள பிரமாதமான புகைப்படத்தை பார்த்து அனைவரும் அசந்து போயுள்ளனர்.

ராஜன் பொண்டாட்டி டா

ராஜன் பொண்டாட்டி டா

இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் வெற்றிக் கூட்டணியில் உருவான வடசென்னை திரைப்படத்தில் சந்திரா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்திருந்த ஆண்ட்ரியா அதற்குப்பின் எங்கு சென்றாலும் "ராஜன் பொண்டாட்டி டா " பலரும் ஒரு முறை சொல்லச் சொல்லிக் கேட்கும் அளவிற்கு அந்த கதாபாத்திரம் மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

எப்போது வெளியாகும்

எப்போது வெளியாகும்

இவ்வாறு இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்தின் கதாபாத்திரங்களும் மூலை முடுக்கில் உள்ள அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த நிலையில், தற்பொழுது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார். மாஸ்டர் படம் எப்போது வெளியாகும் என்பது பற்றி இதுவரை எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டு போகிறது.

சின்னச்சின்ன வீடியோக்கள்

சின்னச்சின்ன வீடியோக்கள்

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து வட்டம், கா, மாளிகை மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ஆண்ட்ரியா அதேசமயம் பல்வேறு திரைப்படங்களில் பாடல்களையும் பாடி வருகிறார். இதற்கிடையில் தனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகர்களை சின்னச்சின்ன வீடியோக்களின் மூலமும் புகைப்படங்களின் மூலமும் மகிழ்ச்சி படுத்தி வரும் ஆண்ட்ரியா தற்பொழுது "லெப்டு ரைட்டு சென்டர்" என கொள்ளை கொள்ளும் செம்ம அழகுடன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

என்னா கண்ணுடா

என்னா கண்ணுடா

அழகான புடவையில் ஸ்லீவ்லெஸ் சட்டை அணிந்துகொண்டு நேர்த்தியான அலங்காரத்துடன் பார்க்கவே ரம்மியமாக காட்சியளிக்கும் அழகில், லெப்டு ரைட்டு சென்டர் என மூன்று பக்கங்களிலும் மயக்கும் அந்த கண்களில் கிறங்க வைக்கும் பார்வையால் பார்த்தவாறு மெச்சும் அழகுள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ள ஆண்ட்ரியாவை பலரும் அசந்துபோய் வர்ணித்து வரும் நிலையில், சிலர் "ராஜன் பொண்டாட்டி டா" எனவும் சிலர் ஆண்ட்ரியாவின் வசீகரிக்கும் கண்களை புகழ்ந்து " என்னா கண்ணுடா" எனவும் வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X