twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண்ணின் மானம் உடையில் இல்லை..ஆண்ட்ரியாவின் தரமான பதில்!

    |

    சென்னை : நடிகை ஆண்ட்ரியா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

    வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அனல் மேலே பனித்துளி. இப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி நவம்பர்18ந் தேதி வெளியாக உள்ளது.

    இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்க, கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார்.

    மெழுகு பொம்மையாக உருகி நிற்கும் ஆண்ட்ரியா: பிசாசு 2 படத்தின் சூப்பர் அப்டேட்டுடன் ஸ்பெஷல் ட்விட்மெழுகு பொம்மையாக உருகி நிற்கும் ஆண்ட்ரியா: பிசாசு 2 படத்தின் சூப்பர் அப்டேட்டுடன் ஸ்பெஷல் ட்விட்

    அனல் மேலே பனித்துளி

    அனல் மேலே பனித்துளி

    இப்படத்தின் அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில், நடிகை ஆண்ட்ரியா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். இதில், இந்த கதையை கேட்டதும் நான் கதையுடன் அப்படியே ஒன்றிவிட்டேன். நான் ஒரு நடிகையாக இந்த படத்தில் நடிக்காமல் ஒரு பெண்ணாக இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைபட்டேன். நாம் நாட்டில் பல பெண்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் இருக்கிறது ஆது உலகுக்கு தெரியவேண்டும் என்று நினைத்தேன்.

    மதி என்கிற ரோலில

    மதி என்கிற ரோலில

    இப்படத்தில் மதி என்கிற கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். பல கனவுடன் சென்னைக்கு வரும் ஒரு பெண்ணின் கதை. பாலியல் வன்முறைக்குள்ளாகும் ஒரு பெண் எப்படி முடங்குகிறாள் என்பது தான் இப்படத்தின் இதன் கரு. இந்த படம் மாதிரி கதைகளை, ஹீரோயின்தான் பண்ண முடியும். ஒரு ஹீரோ பண்ண முடியாது. அதனால, இதுபோன்ற கதைகள் அதிகம் வரவேண்டும் என்றார்.

    பெண்ணின் மானம் உடையில் இல்லை

    பெண்ணின் மானம் உடையில் இல்லை

    மேலும், ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுவிட்டதால் அந்த பெண் உடை அணியும் விதம் குறித்துத்தான் இந்த சமூதாயம் கேள்வி கேட்கிறது. ஒரு பெண்ணின் மானம் அவள் அணியும் உடையில் இல்லை... வாழும் வாழ்க்கையில் உள்ளது என்று கூறினார். மேலும், திருமணம் குறித்த பேசிய ஆண்டிரியா, எனக்கு 30 வயதில் அய்யயோ கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமே, யாரையும் சந்திக்கவில்லையே என்ற நெருக்கடி எனக்குள் இருந்தது.

    சந்தோஷமாக இருக்கிறேன்

    சந்தோஷமாக இருக்கிறேன்

    ஆனால், நிறைய பேர் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் சந்தோஷம் இல்லை. நிறைய பேர் திருமணம் செய்து கொள்ளாமல் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு எந்த மாதிரியான வாழ்க்கை வரும் என்று எனக்கு தெரியாது. ஆனால் எதுவாக இருந்தாலும் என்னுடைய சந்தோசத்திற்கு நான் தான் பொறுப்பு. அது தான் மிக முக்கியம் என்று ஆண்ட்ரியா கூறினார்.

    Read more about: andrea speech
    English summary
    Andrea Jeremiah, who is renowned for powerful bold feminine roles. Anal Mele Pani Thuli movie is directed by debutant R Kaiser Anand and is produced and presented by prominent director Vetrimaaran.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X