புத்தகம் வாசிக்கும் ஆண்ட்ரியா… ஊரடங்கில் சூப்பரான ஐடியா !
சென்னை : முன்னணி நடிகையான ஆண்ட்ரியான தான் வாசிக்கும் புத்தகம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனாவால் தமிழகத்தில் கடந்த மே 10ந் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
படப்பிடிப்பில் பிஸியாக இருத்த நடிகர் , நடிகைகள் தற்போது வீட்டில் தங்களது பொழுதை கழித்து வருகின்றனர்.

கொரோனா உறுதி
நடிகையும்,பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா இரு வாரங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். வீட்டில் இருந்தபடியே மருத்துவர்களின் ஆலோசனையின்படி சிகிச்சை பெற்று தற்போது மீண்டுள்ளார்.

ரசிகர்கள் உற்சாகம்
கொரோனா தொற்றில் இருந்து மீண்ட ஆண்ட்ரியா, தனது இஸ்டாகிராம் பக்கத்தில், தனது ரசிகர்களுக்கு படிக்க நல்ல புத்தகங்களையும் பரிந்துரைத்துள்ளார். இது புத்தகம் படித்துக்கொண்டிருக்கும் புத்தகவாசிகளுக்கும் அவரது ரசிகர்களுக்கு ஒரு உச்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அர்த்தமுள்ளதாக உள்ளது
யுவல் நோவா ஹராரியின் 'சோபியன்ஸ்' மனிதகுலத்தின் சுருக்கமான வரலாறு புத்தகத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகத்தை இரண்டாவது முறையாக படிக்க முயற்சிக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் புத்தகம் வந்த புதிதில் முயற்சித்தேன். ஆனால், அப்போது ஹோமோசாபியன்களைப் பற்றிய மனிதாபிமானமற்ற நுண்ணறிவு என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை . ஆனால் இப்போது, ஒரு தொற்றுநோய்க்குப் பிந்தைய சூழ்நிலையில், இது நிறைய அர்த்தமுள்ளதாகத் தெரிகிறது என்று பதிவிட்டுள்ளார்.

வரிசைகயாக படங்கள்
நடிகை ஆண்ட்ரியா தற்போது, அரண்மனை3, நோ என்ட்ரி , வட்டம் , மாளிகை, கா, பிசாசு 2 என அரை டசன் படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த ஊரடங்குக்கு பின் இவர் படப்பிடிப்பில் படு பிஸியாகி விடுவார்.


Click it and Unblock the Notifications











