Andrea: ஆண்ட்ரியா கொடுத்த முத்தம்.. இப்படியெல்லாம் செய்தா ரசிகர்கள் பாடு திண்டாட்டம் தான்!
சென்னை: நடிகை ஆண்ட்ரியா பாடகியாக சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
பின்னணி பாடகி, நடிகை மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்று பன்முகத்திறமை காட்டி வரும் ஆண்ட்ரியா தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். அடுத்ததாக இவரது நடிப்பில் பிசாசு 2 படம் ரிலீசாகவுள்ளது. நீண்ட நாட்களாக இந்தப் படம் ரிலீசாகாமல் தள்ளிப் போய் வருகிறது. மிஷ்கின் இயக்கத்தில் இந்தப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

பாடகியிலிருந்து நடிகை: பாடகியாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா அடுத்தடுத்து நடிகையாகவும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் மாடலிங், இசை கச்சேரிகளிலும் இவரை பிசியாக பார்க்க முடிகிறது. சமூக வலைதளங்களிலும் தன்னுடைய அடுத்தடுத்த அப்டேட்களை இவர் வெளிப்படுத்தி வருகிறார். திரைத்துறையில் 15 ஆண்டுகளை கடந்து சிறப்பாக செயல்பட்டுவரும் ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமாரின் மனைவியாக தன்னுடைய என்ட்ரியை கொடுத்திருந்தார்.
அடுத்தடுத்த படங்களில் ஆண்ட்ரியா: முதல் படத்திலேயே ஒரு சிறுவனின் அம்மாவாக நடித்துள்ள ஆண்ட்ரியா, தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இறுதியாக ஆண்ட்ரியா நடிப்பில் அரண்மனை 3 படம் வெளியான நிலையில், அடுத்தடுத்து அனல் மேலே பனித்துளி, பிசாசு, கா, மல்லிகை, நோ என்ட்ரி, வட்டம் என ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. மேலும் பெயரிடப்படாத இரு படங்களும் இவரது நடிப்பில் உருவாகிவருகின்றன.
சமூக வலைதளங்களில் பிசி: இதனிடையே உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் தொடர்ந்து இசை கச்சேரிகளிலும் பிசியாக பங்கேற்று வருகிறார் ஆண்ட்ரியா. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஆண்ட்ரியா அடுத்தடுத்து தன்னுடைய படங்களின் ரிலீஸ் குறித்த தகவல், தான் பங்கேற்கும் விழாக்கள், போட்டோஷூட்கள் என அடுத்தடுத்த பதிவுகளை பகிர்ந்து வருகிறார். இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் ஆண்ட்ரியாவை 3 மில்லியனுக்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகின்றனர்.
புதிய புகைப்படங்கள்: இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா. கருப்பு நிறத்தில் கவர்ச்சி தூக்கலான உடையில் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இவை மிகச்சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. மேலும் இந்தப் புகைப்படத்தில் அவர் ரசிகர்களை பார்த்து முத்தம் கொடுப்பதாகவும் புகைப்படம் அமைந்துள்ளது மிகவும் அதிகமாக ரசிக்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டு பயணங்கள்: அடுத்தடுத்த வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு வருகிறார் ஆண்ட்ரியா. இசைக்கச்சேரிகள், படங்களின் சூட்டிங் உள்ளிட்டவை மட்டுமில்லாமல் தனிப்பட்ட முறையிலும் இவரை அடிக்கடி வெளிநாடுகளில் பார்க்க முடிகிறது. இவற்றின் புகைப்படங்களையும் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வரும் ஆண்ட்ரியா, லட்சக்கணக்கில் லைக்ஸ்களை குவித்து வருகிறார். சமீபத்தில் இலங்கை சென்றிருந்த இவர் அதன் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். சூரிய உதயத்தில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் சிறப்பாக அமைந்திருந்தன


Click it and Unblock the Notifications











