இதுக்கு பேரு லக் தானே...அறிமுக படம் ரிலீஸ் ஆவதற்குள்ளாகவே 3 படங்களை முடித்த ஹீரோயின்!

By

சென்னை: அறிமுக படம் ரிலீஸ் ஆவதற்குள்ளாகவே 3 படங்களை முடித்துள்ளார் இளம் ஹீரோயின்

வழக்கம் போல ஹீரோயின்களை தமிழுக்கு இறக்குமதி செய்யும் கடவுளின் தேசம், இப்போது புது நாயகி ஒருவரை தந்திருக்கிறது.

அவர் அனிகா விக்ரமன். ஜாஸ்மின் என்ற படம் அறிமுகமாக இருந்த இவர், இப்போது மூன்று படங்களை முடித்திருக்கிறார்.

லேசா வலிச்சுதா

லேசா வலிச்சுதா

ஜாஸ்மின் படத்தை ஜெஹன் சாய் இயக்கியுள்ளார். இதில் திராவிடன், இளங்கோ பொன்னையா, வைஷாலி உட்பட பலர் நடித்துள்ளனர். அனிகா விக்ரமன் ஹீரோயின். இந்தப் படத்துக்காக இவர் நடித்துள்ள 'லேசா வலிச்சுதா... உதட்டோரம்...' என்ற பாடல் காட்சி யூடியூப்பில் ஹிட் ஆகியுள்ளது. சத்யா இசையில் சித் ஶ்ரீராம் இந்தப் பாடலை பாடியுள்ளார்.

கால்பந்து வீரனின் கதை

கால்பந்து வீரனின் கதை

அடுத்து, பாபு தமிழ் இயக்கும் க் படத்தில் நடித்துள்ளார். நவீன் தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகேஷ், குரு சோமசுந்தரம், ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடிக்கின்றனர். பாபு தமிழ் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி பேசப்பட்ட ஜிவி படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கால்பந்து வீரரின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் கதை இது.

எங்க பாட்டன் சொத்து

எங்க பாட்டன் சொத்து

இதையடுத்து சற்குணம் இயக்கத்தில் விமல் ஜோடியாக எங்க பாட்டன் சொத்து படத்தில் நடித்திருக்கிறார். இதுபற்றி அனிகா விக்ரமன் கூறும்போது, தமிழில் நடித்த முதல் படம் ரிலீஸ் ஆவதற்குள்ளாகவே மேலும் இரண்டு படங்களில் நடித்து முடித்து விட்டேன். இதற்கு அதிர்ஷ்டம் காரணம் என்று கூறுவதை ஏற்கமாட்டேன். இந்தப் படங்களின் ரிலீஸை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். மூன்று படங்களுமே எனக்கு நல்ல பெயர் பெற்று தரும் என்று நம்புகிறேன்.

நடனம், களறி

நடனம், களறி

சிறந்த கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. திறமையான நடிகைகளுக்கு தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள். எனக்கும் அந்த ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். நடனம், கேரள பாரம்பரிய கலையான களறிபயட்டு போன்றவற்றைக் கற்றுள்ளேன். ஓரளவு பாடலும் பாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X