குட்டி நயனின் பேபி டால் பிக்ஸ்... பனிக்கு நடுவே ஏஞ்சல் என வர்ணித்த ரசிகர்கள்!
சென்னை : இதுவரை குழந்தை நட்சத்திரமாக மட்டுமே நடித்து வந்த நடிகை அனிகா சுரேந்திரன் இப்பொழுது கதாநாயகியாக பிரபல மலையாள திரை படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.
பல மலையாள திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தமிழில் அஜீத்துடன் இணைந்து நடித்த என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்கள் அவரை புகழின் உச்சியில் நிறுத்திவிட்டது.
முன்னணி கதாநாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு கலக்கி வரும் குட்டி நயன் அனிகா சுரேந்திரன் இப்பொழுது புத்தாண்டில் பேபி டால் போல அட்டகாசமான காஸ்டியூமில் இருக்கும் புகைப்படங்களை புத்தாண்டுக்கு வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.

அஜித்தின் விஸ்வாசம்
தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இரண்டு திரைப்படங்களிலேயே இப்பொழுது ஹீரோயின் லெவலுக்கு எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டுள்ள நடிகை அனிகா சுரேந்திரன் அஜித்தின் என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமாகி உள்ளார்.

தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக
விஸ்வாசம் திரைப்படத்தில் பார்க்க அச்சு அசல் நயன்தாராவைப் போலவே இருந்த அனிதா அதிலிருந்து குட்டி நயன் என பலராலும் அழைக்கப்பட்டு வரும் நிலையில் மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற கப்பேலா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாகவும் அறிமுகமாக உள்ளார்.

பேபி டால் போட்டோ ஷூட்
தென்னிந்தியாவில் ஹீரோயினாக கலக்க இருக்கும் அனிகா சுரேந்திரன் முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அனைவரும் ரசிக்கின்ற வகையில் அட்டகாசமான பல போட்டோக்களையும் ஒரு சில கவர்ச்சி போட்டோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வரும் இவர் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள பேபி டால் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை கலக்கி வருகிறது.

புத்தாண்டு ஸ்பெஷல்
பேபி டால் போல அட்டகாசமான ப்ளூ ட்ரெஸ்ஸில் பனிப் பொழிவிற்கு நடுவில் நிற்கும் ஏஞ்சல் போல பார்க்கப் பார்க்க திகட்டாத கொள்ளை அழகில் இருக்கும் இந்தப் புத்தாண்டு ஸ்பெஷல் போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதை அடுத்து லட்சக் கணக்கில் லைக்குகளை அள்ளி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











