அனிகா சுரேந்திரனின் 21வது பிறந்தநாள்.. ப்ரைவேட் பார்ட்டி.. கிளாமரஸ் லுக்கில் அட்டகாசமான போஸ்!
சென்னை: தமிழ் திரைப்பட உலகின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை அனிகா சுரேந்திரன் தனது 21வது பிறந்த நாளை நண்பர்களுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடி உள்ளார். சமூக வலைதளங்களில் அவர் வெளியிட படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான அனிகா, அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அவரின் மகளாக நடித்து இருக்கிறார். அதைத்தொடர்ந்து நானும் ரௌடி தான், மிருதன், மாமனிதன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். தற்போது இவர் வளர்ந்துவிட்ட நிலையில் ஹீரோயினாகவும் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில், தனுஷ் இயக்கத்தில் வந்த 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தில் முக்கிய ரோலில் அனிகா நடித்து இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த ஆண்டில் அனிகா PT Sir, இந்திரா, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என மூன்று படத்தில் நடித்திருந்தார். தற்போது அனிகா தமிழில், வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்திலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

21 வயசு ஆச்சு: நடிகை அனிகா சுரேந்திரன் தனது பிறந்தநாளை பிரைவேட் பார்ட்டி ஸ்டைலில் கொண்டாடி உள்ளார். அதில், அனிகாவின் நெருங்கிய நண்பர்கள், திரைப்பட உலகைச் சேர்ந்த சிலரும் விழாவில் கலந்துகொண்டனர். கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் அனிகா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
புதிய அனுபவத்திற்கு ரெடி: பார்ட்டி இரவு நேரம் வரை நீடித்ததாகவும், அனிகா அணிந்திருந்த பார்ட்டி உடை மற்றும் மேக்கோவர் சமூக வலைத்தளங்களில் பேச்சாக மாறியுள்ளன. "You are glowing", "Happy birthday Princess", "Future Superstar" போன்ற ஆயிரக்கணக்கான கருத்துகள் வரிசையாக குவிந்து வருகின்றன. தனது பிறந்தநாளை முன்னிட்டு அனிகா நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு குறிப்பையும் வெளியிட்டுள்ளார். அதில் "என்னை நேசிக்கும் அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் என்னை எப்போதும் உறுதியாக்குறிது. புதிய வயதுக்கும் புதிய அனுபவங்களுக்கும் ரெடி" என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











