அஜித்தின் ரீல் மகள்..அனிகாவுக்கு அடித்தது ஜாக்பாட்..பொறாமைப்படும் நடிகைகள்!

சென்னை : தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் ரீல் மகளான அனிகா ஓ மை டார்லிங் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார்.

Recommended Video

Jailer படத்தில் இவங்க தான் Heroine-னா? இந்த Twist-டை எதிர்பார்க்கலையே... *Kollywood

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அவரின் மகளாக நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்திரன்.

அதன் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் அவர்களின் செல்ல மகளாக நடித்திருந்தார்.

அனிகா சுரேந்திரன்

அனிகா சுரேந்திரன்

மலையாளத்தில் பிரபலமான குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன். 3 வயதில் சோட்டா மும்பை என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பாஸ் என்கிற பாஸ்கரன், நானும் ரவுடிதான், மிருதன் படங்களில் நடித்துள்ளார். இவர் பார்ப்பதற்கு நயன்தாரா போல இருப்பதால், இவரை குட்டி நயன்தாரா என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

ஓ மை டார்லிங்

ஓ மை டார்லிங்

இந்நிலையில், ஆல்ஃபிரட் டி. சாமுவேல் இயக்கத்தில் "ஓ மை டார்லிங்" எனும் மலையாள படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் அனிகா. ஆஷ் ட்ரீ வென்ச்சர்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீகாந்தா இப்படத்தை தயாரிக்க, ஜினேஷ் கே ஜாய் திரைக்கதை எழுதியுள்ளார். ஓ மை டார்லிங் படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் கடந்த வாரம் கும்பலத்தில் ஒரு பாரம்பரியமான பூஜையுடன் தொடங்கப்பட்டது.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

இந்த பூஜை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் முகேஷ், விஜயராகவன், லீனா, ஜானி ஆண்டனி, மஞ்சு பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த படத்தில் இளம் நடிகர்களான மெல்வின் ஜி. பாபு, ஸ்ரீகாந்த் முரளி, நந்து, ஷியாம்பிரசாத், டெய்ன் டேவிஸ், ஃபுக்ரு, ரிது, சோஹன் சீனுலால் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். படத்திற்கு இசையமைக்கவுள்ளார் ஷான் ரெஹ்மான்.

வாசுவின் கர்ப்பிணிகள்

வாசுவின் கர்ப்பிணிகள்

அது மட்டும் இல்லாமல் மணிநாகராஜ் இயக்கத்தில் நீயா நானா புகழ் கோபிநாத் நடித்திருக்கும் வாசுவின் கர்ப்பிணிகள் படத்தில் கர்ப்பிணியாக நடித்துள்ளார் அனிகா. பெரிய வயிறுடன் அனிகா பாவம் போன்று நிற்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த படத்தை விஜய்யின் உறவினரும், மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.17 வயதே ஆன அனிகாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு தேடி வருவதை பார்த்து மற்ற நடிகைகள் பொறாமையுடன் அவரைபார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X