கொள்ளை அழகால் ரசிகர்களை வாட்டி எடுக்கும் குட்டி நயன்!
சென்னை : மலையாளம், தமிழ் என இரு மொழிகளிலும் பிரபலமாக உள்ள குழந்தை நட்சத்திரம் அனிகா விஸ்வாசம் படத்தை தொடர்ந்து இப்போது விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.
இதுவரை குழந்தை நட்சத்திரமாக மட்டுமே நடித்து வந்த அனிதா இப்போது முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கில் பிரபல மலையாள திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.
சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வசியம் செய்து வரும் இவர் இப்பொழுது கொள்ளை அழகால் ரசிகர்களை வாட்டி எடுக்கும் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

விளம்பர படங்களில்
இதுவரை தமிழில் அறிமுகமான எந்த ஒரு குழந்தை நட்சத்திரங்களுக்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வரவேற்பு அனிகா சுரேந்திரனுக்கு இருந்து வருகிறது. மலையாளத்தில் விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு வந்த இவர் இப்பொழுது திரைப்படங்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார்.

அடுத்தடுத்து இரண்டு படங்களில்
குறிப்பாக தமிழில் அஜீத் குமாருடன் இணைந்து அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க முதலாவதாக வெளியான என்னை அறிந்தால் இவருக்கு தமிழ் ரசிகர்களிடையே பெரும் அறிமுகத்தை பெற்றுத்தர அதன் பின்பு மீண்டும் விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்துக்கு குழந்தையாக நடித்து அஜித் குமாரின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

ஓடிடியில் வெளியிட
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க அதில் ஜெயலலிதாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருந்த இவருக்கு தமிழில் மேலும் பல வாய்ப்புகள் குவிந்து இப்போது விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

முகம் நிறைய புன்னகையுடன்
இவரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா சுரேந்திரன் இப்பொழுது முதன் முறையாக ஹீரோயின் அவதாரம் எடுக்க மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற கப்பெல்லா தெலுங்கு ரீமேக்கில் நடித்து ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். விரைவில் தென்னிந்தியாவையே ஒரு கலக்கு கலக்கி முன்னணி நடிகையாக வலம் வர இருக்கும் அனிதா சுரேந்தர் இப்பொழுது லைட் பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் ஆடையில் முகம் நிறைய புன்னகையுடன் பார்க்கப் பார்க்க திகட்டாத கொள்ளை அழகால் ரசிகர்களை வாட்டி எடுக்கும் இந்த லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications