ஸ்கூல் ட்ரெஸ்ஸில் குட்டி நயன் வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள்!
சென்னை : குழந்தை நட்சத்திரமாக பலருக்கும் அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக விரைவில் அறிமுகமாக உள்ளார்.
அஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்த இவர் இப்பொழுது விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விரைவில் தெலுங்கு சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமாக உள்ள அனிகா சுரேந்திரன் இப்பொழுது ஸ்கூல் ட்ரெஸ்ஸில் கூலாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.

கிளாஸான ஆக்சன் படமாக
நடிகர் அஜீத் போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருந்த என்னை அறிந்தால் திரைப்படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார். என்னை அறிந்தால் திரைப்படம் ஒருபுறம் கிளாஸான ஆக்சன் படமாக இருந்தாலும் மற்றொருபுறம் அப்பா மகள் பாசத்தை மையப்படுத்தி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பல மலையாள படங்களில் நடித்து வந்த அனிகா சுரேந்திரனுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுத் தந்தது.

அப்பா மகள் சென்டிமென்ட் காட்சிகளுக்காகவே
என்னை அறிந்தால் வெற்றியை தொடர்ந்து தமிழ் ரசிகர்களால் அதிகமாக கவனிக்கப்பட்ட அனிகா சுரேந்திரன் பாஸ்கர் த ராஸ்கல், நானும் ரவுடிதான்,மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் அஜித்துடன் இணைந்து விஸ்வாசம் திரைப்படத்தில் மகளாக நடித்திருந்தார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்,நயன்தாரா இணைந்து நடித்த இந்த திரைப்படம் வசூலை வாரி குவித்தது. அப்பா மகள் சென்டிமென்ட் காட்சிகளுக்காகவே இந்த திரைப்படம் திரையரங்குகளில் பல நாட்கள் ஓடி வசூல் வேட்டை நடத்தியது.

மாமனிதன்
இதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா சுரேந்திரன் தெலுங்கில் பிரபல மலையாள திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். விரைவில் தமிழிலும் நாயகியாக அறிமுகமாக உள்ள அனிகா சுரேந்திரன் இப்பொழுது சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள மாமனிதன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஸ்கூல் ட்ரெஸ்ஸில் குட்டி நயன்
அடிக்கடி அசரவைக்கும் போட்டோ ஷூட்களை நடத்தி சமூக வலைதளத்தை திண்டாட வைத்து வரும் நடிகை அனிதா சுரேந்திரன் இப்பொழுது ஸ்கூல் ட்ரெஸ்ஸில் கூலாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஸ்வாசம் படத்திற்குப் பிறகு அனைவரும் இவரை குட்டி நயன் என அழைத்து வர இந்த ஸ்கூல் டிரஸ்ஸில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து பலரும் வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











