அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் பிரபல டிவி சேனலில் வாய்ப்பு? மர்ம நபரை மாட்டிவிட்ட 'பிக்பாஸ்'அனிதா சம்பத்!
சென்னை: அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் பிரபல டிவி சேனலில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்ட நபரின் முகத்திரையை கிழித்துவிட்டுள்ளார் அனிதா சம்பத்.
சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் அனிதா சம்பத். சன் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
மேலும் 2.o, காலா, காப்பான் உள்ளிட்ட சில படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் அனிதா சம்பத்.
Recommended Video

கோபப்பட்ட அனிதா சம்பத்
நடிகை அனிதா சம்பத், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் டாஸ்க்குகளையும் ரூல்ஸ்களையும் சரியாக பின்பற்றிய அனிதா சம்பத், அடிக்கடி கோபப்பட்டதால் தனது பெயரைக் கெடுத்துக்கொண்டார்.

முகத்தை காட்டிய அனிதா
ஆரம்பத்திலேயே சுரேஷ் சக்கரவர்த்தியுடன் அனிதா சம்பத்துக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஜித்தன் ரமேஷ், ரியோ, கேபி, சனம், நிஷா, ஆரி என அனைவரிடமும் முகத்தைக் காட்டினார். இருப்பினும் டாஸ்க்குகளை சரியாக செய்ததால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவும் இருந்தது.

சமூக வலைத்தில் ஆக்ட்டிவ்
தற்போது நடிகை அனிதா சம்பத் ஜாங்கோ படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அனிதா சம்பத் அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். தனது கணவருடன் இருக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

ஷேர் செய்த ஸ்க்ரீன் ஷாட்
மேலும் யூட்யூப் சேனலையும் நடத்தி வரும் அனிதா சம்பத், சேலை கட்டுவது, மேக்கப் செய்வது, சமையல் என அனைத்து தொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை அனிதா சம்பத் தனது சமூக வலைதள பக்கத்தில் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை ஷேர் செய்து அதிர வைத்துள்ளார்.

அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய வேண்டும்
அதாவது காஸ்ட்டிங் டைரக்டர் என்ற பெயரில் ஒரு நபர் அனிதா சம்பத்தின் தோழியிடம் சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது விஜய் டிவியில் வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என அந்த நபர் கூறியுள்ளார்.

மிஸ் கைடு செய்வார்கள்
அந்த நபர் அனுப்பிய மெஸேஜ்களின் ஸ்க்ரீன்ஷாட்டை அனிதா சம்பத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இவரை போன்ற சில ஃபிராடுகள் காஸ்டிங் டைரக்டர் என்ற பெயரில் உங்களை மிஸ் கைடு செய்வார்கள்.. அவர்களை தயவு செய்து நம்பாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தவறாக பேசிய நபர்
மேலும் இந்த ஐடியை தனது தோழியின் மூலம் தெரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். அனிதா சம்பத் இதற்கு முன்பு தன்னிடம் தவறாக பேசிய நபரின் மெஸேஜ்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு அவரது முகத்திரையை கிழித்தார். பின்னர் அந்த நபர் அனிதா சம்பத்திடம் மன்னிப்பு கேட்டு பிரச்சனை பேசி தீர்த்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











