அடேங்கப்பா.. அஞ்சலி சைஸ்க்கு கேக் இருக்கும் போல.. திருமணம் ஆகாமல் முரட்டு சிங்கிளா சுத்துறாரே!
சென்னை: நடிகை அஞ்சலி தென்னிந்திய சினிமாவில் தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை அட்டகாசமாக ஆடி வருகிறார். குறிப்பாக தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். கமர்ஷியல் படம், அழுத்தம் திருத்தமான கதாபாத்திரம் என எது கொடுத்தாலும் அதில் ஒரு கை பார்த்துவிடுகிறார் அஞ்சலி. இவர் நேற்று அதாவது ஜூன் 16ஆம் தேதி தனது 39 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். தனது பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
நடிகை அஞ்சலி திரையுலகில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளார். தமிழில் இயக்குநர் ராமின் கற்றது தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், அந்த படத்திற்காக சிறந்த அறிமுக கதாநாயகிக்கான பிலிம் ஃபேர் விருதையும் வென்றார். அஞ்சலியின் அறிமுகப்படமே மிகவும் அழுத்தம் திருத்தமான கதாபாத்திரமாக இருந்ததால் அவருக்கு தொடர்ந்து அப்படியான படங்கள் வந்து கொண்டு இருந்தது. குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான அங்காடித் தெரு படம் ரசிகர்களை மனதை முழுவதுமாக மாற்றிய படம்.
அஞ்சலி தொடர்ந்து அழுத்தம் திருத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதற்கு உள்நாட்டு விருதுகள் மட்டுமல்லாமல் சர்வதேச விருதுகளும் குவித்தார். தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கலக்கி வந்தார். ஆனாலும் அவரது தாய் மொழியான தெலுங்கு மொழியில் மட்டும் கொஞ்சம் பின் தங்கி இருந்தார். தமிழில் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் இவர் நடித்த படங்கள் கமர்ஷியலாக இவருக்கு கை கொடுத்தது.

தெலுங்கில் மாஸ்: அஞ்சலிக்கு தனது தாய் மொழியான தெலுங்கில் கலக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே வந்தது. இதனால் மற்ற மொழிகளில் கமர்ஷியல் படங்களில் பணத்திற்காக நடிப்பதை தவிர்த்து விட்டு, முழுக்க முழுக்க தெலுங்கில் கவனம் செலுத்தினார். இவரது கடைசி சில ஆண்டுகால சினிமா கெரியரை எடுத்துப் பார்த்தால் தெலுங்கில் இவர் எவ்வளவு கவனமாக படங்களைத் தேர்வு செய்து அதில் ஹிட்டும் கொடுத்துள்ளார் என்பது நன்றாகத் தெரியும். தெலுங்கில் தற்போது டாப் நடிகைகளில் ஒருவராக வளர்ந்து நிற்கிறார்.
நடிகருடன் காதல் கிசுகிசு: இப்படி இருக்கும்போது நடிகை அஞ்சலி மற்ற மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்தும் வந்தார். தற்போது தமிழில் இவரது நடிப்பில் வெளியாக தயாராக உள்ள படம் இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள பறந்து போ படம் தான். இந்நிலையில் அஞ்சலி நேற்று அதாவது ஜூன் 16ஆம் தேதி தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அஞ்சலி கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் உள்ள அஞ்சலி குறித்து அவ்வப்போது சில நடிகருடன் காதலில் உள்ளார் என்ற கிசுகிசுக்கள் அடிபட்டது.
பிறந்தநாள் கொண்டாட்டம்: அதன் பின்னர் அவை எல்லாம் காணாமல் போக, நடிகை இப்போதுவரை சிங்கிளாக உள்ளார். இன்னும் சொல்லப்போனால் முரட்டு சிங்கிளாக உள்ளார். இந்த பிறந்த நாளையும் சிங்கிளாகவே கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அஞ்சலி. தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நாய் குட்டியை கட்டிப் பிடித்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அஞ்சலி அவங்க சைஸ்க்கு ஏத்த மாதிரி கேக் வெட்டி இருக்காங்க, அடுத்த முறை கேக் வெட்டும் போது அவங்களுக்கு ஏத்த மாதிரி காதலனோடோ கணவனோடு கேக் வெட்ட வாழ்த்துகள் என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











