அசந்த நேரம்பார்த்து அஞ்சலியை அப்டியே க்ளிக்கிய ஃபோட்டோ... என்ன ஒரு கலகல சிரிப்பு!
சென்னை : அஞ்சலி இதுவரை பல கதாபாத்திரங்கள் நடித்து இருந்தாலும் முதன்முறையாக இரட்டை வேடத்தில் பாவக் கதைகள் ஆந்தாலஜி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் பிங்க் திரைப்படம் ரீமேக் செய்யப்பட அதில் 3 கதாநாயகிகளில் ஒருவராக அஞ்சலி நடித்துள்ளார்.
அஞ்சலியின் புன்னகைக்கு பல கோடிப்பேர் அடிமையாக இருக்க இப்பொழுது அசந்த நேரம் பார்த்து அஞ்சலியை அப்டியே க்ளிக்கிய ஃபோட்டோ இணையதளத்தில் கலக்குகிறது.

விருதுகளை வென்று
இயக்குனர் ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை அஞ்சலி முதல் படத்திலேயே அனைவரது பாராட்டுக்களையும் பெற்று மிகச் சிறந்த நடிகை என பெயர் வாங்கியவர். தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து பல விருதுகளை வென்று வந்த இவருக்கு தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் ரசிகர்கள் பலர் உள்ளனர்.

சர்வதேச அளவில் கவனத்தை
எங்கேயும் எப்போதும், கற்றது தமிழ், அங்காடித்தெரு, கலகலப்பு, வத்திக்குச்சி என பல ஹிட் படங்களை கொடுத்த அஞ்சலி மீண்டும் இயக்குனர் ராம் இயக்கத்தில் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்ற பேரன்பு படத்தில் நடித்து அதிலும் வெற்றி கண்டார்.

மூன்று பெண்களில் ஒருவராக
இந்தியில் மிகப்பெரிய ஹிட் அடித்த பிங்க் தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட இப்பொழுது தெலுங்கில் வக்கீல் சாப் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்க, கதையின் முக்கிய கதாபாத்திரங்களாக இருக்கும் மூன்று பெண்களில் ஒருவராக அஞ்சலி நடித்துள்ளார் இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

அப்டியே க்ளிக்கிய ஃபோட்டோ
இன்று வரை எந்த ஒரு படங்களில் நடித்தாலும் முதல் படத்தில் பார்த்ததைப் போலவே அதே துடிப்புடன் பட்டைய கிளப்பி வரும் அஞ்சலி எண்ணற்ற கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும் சமீபத்தில் வெளியான பாவக் கதைகள் ஆந்தாலஜி திரைப்படத்தில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி இருப்பார். இந்தப் படமும் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது. இந்த நிலையில் தான் அந்த சமயத்தில் அப்டியே க்ளிக்கிய ஃபோட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்க அதில் அஞ்சலி தளும்ப தளும்ப சேலையில் கலகலவென சிரித்துக் கொண்டிருக்க இந்த போட்டோ இணையதளத்தை கலக்குகிறது.


Click it and Unblock the Notifications