பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் படத்தில் கமிட்டான நடிகை அஞ்சலி.. தீயாய் பரவும் தகவல்!
சென்னை: ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிகை அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அஞ்சலி.
மாடல் அழகியாக இருந்த அஞ்சலி போட்டோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தமிழில் கற்றது தமிழ் படம் மூலம்
தொடர்ந்து தெலுங்கு படத்தில் நடித்த அஞ்சலி கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு ஆயுதம் செய்வோம், அங்காடித் தெரு, ரெட்டை சுழி, மகிழ்ச்சி, தூங்கா நகரம், கருங்காளி, மங்காத்தா, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக பாவக்கதைகள்
மேலும் கலகலப்பு, வத்திக்குச்சி, சேட்டை, சகலகலா வல்லவன், பேரன்பு, சைலன்ஸ், நாடோடிகள் 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக தமிழில் பாவ கதைகள் ஆந்தாலஜி படம் வெளியானது. தெலுங்கில் வக்கீல் சாப் என்ற படம் கடைசியாக வெளியானது.

தமிழில் முன்னணி நடிகையாக
அஞ்சலி நடிப்பில் வெளியான அங்காடித் தெரு, சேட்டை, கலகலப்பு, சகலகலா வல்லவன் ஆகிய படங்கள் அவரை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்நிலையில் தற்போது எஃப் 3 என்ற தெலுங்கு படத்திலும் பைராகி என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார் அஞ்சலி.

தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அஞ்சலி, கைவசம் சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக எந்த படம் வைத்திருக்கவில்லை. அடிக்கடி காதல் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார் அஞ்சலி. தமிழில் முன்னணி நடிகர் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்ட அஞ்சலி பின்னர் தெலுங்கில் தயாரிப்பாளர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல் வெளியானது.

காதல் தோல்வியில் முடிந்தது
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் காதல் உறவில் இருந்தது உண்மைதான் என்றார். அந்த காதல் தோல்வியில் முடிந்து விட்டதாகவும் கூறினார் நடிகை அஞ்சலி. அந்த காதல் நன்றாக சென்றிருந்தால் நானே எல்லோருக்கும் சொல்லியிருப்பேன் என்றும் நடிகை அஞ்சலி தெரிவித்திருந்தார்.

ஷங்கர் இயக்கத்தில் ஒப்பந்தம்
தமிழில் பட வாய்ப்புகள் சரிவர அமையாததால் தெலுங்கு, கன்னடம், மலையாள போன்ற பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் படத்தில் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த மாதம் படப்பிடிப்பு
இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளார். இதில் தற்போது அஞ்சலியும் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











