திரு -கிருஷ்ணாவுடன் புதிய வெப் தொடருக்காக கைகோர்க்கும் அஞ்சலி!
சென்னை : நடிகை அஞ்சலி சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய போல்டான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது கற்றது தமிழ் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
மேலும் திரு இயக்கத்தில் கிருஷ்ணா தயாரித்துவரும் புதிய வெப் தொடரில் அஞ்சலி இணைந்துள்ளார்.

நடிகை அஞ்சலி
நடிகை அஞ்சலி தனது போல்டான கேரக்டர்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் ஏராளமான ரசிகர்களையும் கொண்டுள்ளார். இவரது கற்றது தமிழ் படம் இவருக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது. முதல் படத்திலேயே சிறப்பான விமர்சனங்களை பெற்றார்.

தென்னிந்திய நடிகை
தொடர்ந்து இவருக்கு அங்காடித்தெரு படம் ஏற்றத்தை கொடுத்தது. எங்கேயும் எப்போதும், தம்பி வெட்டேத்தி சுந்தரம், கலகலப்பு, அரவான் என இவரது தமிழ் படங்களின் பட்டியல் நீளமானது. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய படங்களில் இவர் நடித்துள்ளார்.

ராமின் இயக்கத்தில் அஞ்சலி
நடிகை அஞ்சலி கற்றது தமிழ், பேரன்பு உள்ளிட்ட படங்களுக்கு பின்பு மீண்டும் இயக்குநர் ராமின் இயக்கதில் தற்போது நடித்து வருகிறார். இதில் நிவின் பாலியும் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தில் காமெடி நடிகர் சூரியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பு
படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இதனிடையே, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ராம் இயக்கத்தில் இணைவது குறித்து நடிகை அஞ்சலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது புதிய வெப் தொடரிலும் நடிகை அஞ்சலி கமிட் ஆகியுள்ளார்.

புதிய வெப்தொடரில் அஞ்சலி
தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் திரு இந்த சீரிசை இயக்கவுள்ளார். மேலும் கழுகு உள்ளிட்ட படங்களில் நடிததுள்ள கிருஷ்ணா இந்த தொடரை தயாரிக்கவுள்ளார். இந்த தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீசாகவுள்ளது.
Recommended Video

அஞ்சலி மகிழ்ச்சி
ஜான்சி என்று இந்த வெப்தொடருக்கு பெயரிடப்படடுள்ளது. இந்த தொடர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள அஞ்சலி, கிருஷ்ணா மற்றும் திருவுடன் தான் இணைந்துள்ள புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











