பௌர்ணமியே தோற்றுப் போகும் அழகு... அஞ்சலியின் லேட்டஸ்ட் போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்!
சென்னை : தெலுங்கில் வெங்கடேஷ்,வருண் தேஜ்,தமன்னா ஆகியோர் நடிப்பில் வெளியான F2 மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதன் அடுத்த பாகம் F3ல் அஞ்சலியும் சேர்ந்துள்ளார்
இயக்குனர் ஷங்கர் முதல் முறையாக தெலுங்கில் இயக்கும் புதிய திரைப்படத்தில் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் உள்ள அதிகாரியாக நடித்து வருகிறார்.
ராம் இயக்கத்தில் அஞ்சலி மீண்டும் புதிய திரைப்படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்து வர பௌர்ணமியே தோற்றுப் போகும் அளவிற்கு அழகில் ஜொலிக்கும் அஞ்சலியின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகிறது

அடுத்தடுத்த படங்கள் வெற்றிப்படங்களாக
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மிகச் சிறப்பாக செய்து முடிக்கக்கூடியவர் நடிகை அஞ்சலி. தமிழ் சினிமாவிற்கு கற்றது தமிழ் மூலம் அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார்.

சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில்
இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது. அதைத் தொடர்ந்து வெளியான அங்காடித்தெரு படம் இவரை புகழின் உச்சியில் தூக்கி நிறுத்தியது. மகிழ்ச்சி,தூங்கா நகரம்,

மங்காத்தா, எங்கேயும் எப்போதும்,
கலகலப்பு,வத்திகுச்சி என அஞ்சலிக்கு வெளியான அனைத்து திரைப்படங்களும் ஹிட்டடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார். நீண்ட இடைவெளி கழித்து மீண்டும் ராம் இயக்கத்தில் தரமணி படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு மீண்டும் ராம் இயக்கத்தில் பேரன்பு படத்தில் மிகவும் வித்தியாசமான ரோலில் நடித்து ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தார்

கலகலப்பான காமெடி படமாக
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா ஆகியோர் நடிப்பில் கலகலப்பான காமெடி படமாக வெளியான F2 மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதன் அடுத்த பாகம் தற்போது உருவாகி வருகிறது. வெங்கடேஷ்,வருண் தேஜ், தமன்னா, ஆகியோருடன் இந்த முறையை நடிகை அஞ்சலியும் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.

பௌர்ணமியே தோற்றுப் போகும் அழகு
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக உள்ள இயக்குனர் ஷங்கர் முதல் முறையாக தெலுங்கில் நேரடிப் படத்தை இயக்கி வருகிறார் . ராம் சரண் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. இதில் அஞ்சலி முக்கிய வேடத்தில் அதிகாரியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சலி பௌர்ணமியே தோற்றுப் போகும் அளவிற்கு அழகில் ஜொலிக்கும் அழகிய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்குகளை குவிக்கிறது.


Click it and Unblock the Notifications











