கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் செம்ம க்யூட் பிக்ஸ்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகை!

சென்னை : நடிகைகள் பலரும் தங்களை அழகாக காட்டும் கச்சிதமான மேக்கப்புடன் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வரும் நிலையில் நடிகை அஞ்சலி மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை தற்பொழுது பகிர்ந்துள்ளார்.

கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், அங்காடி தெரு உள்ளிட்ட பல தரமான தமிழ் படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக உள்ள அஞ்சலி தமிழில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.

லாக்டவுனில் பல்வேறு புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் அஞ்சலி, தற்பொழுது மேக்கப் இல்லாமல் வெளியிட்டுள்ள அழகான புகைப்படம் ஒன்று ரசிகர்களால் கவரப்பட்டு வைரலாகி வருகிறது.

துறுதுறு பேச்சு

துறுதுறு பேச்சு

எதார்த்தமான நடிப்பு மற்றும் துறுதுறு பேச்சு என ரசிகர்களை தொடர்ந்து ரசிக்க வைத்து வரும் நடிகை அஞ்சலி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

சிறந்த கதையம்சம்

சிறந்த கதையம்சம்

சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வரும் அஞ்சலி, தமிழ் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத பல தரமான படங்களை தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் கொடுத்துள்ளார். அவ்வாறு இவர் நடிப்பில் வெளியான கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், அங்காடி தெரு உள்ளிட்ட பல படங்கள் இன்றளவும் ரசிகர்களால் மிகவும் பேசப்பட்டு வருகிறது.

மேக்கப் இல்லாத புகைப்படம்

மேக்கப் இல்லாத புகைப்படம்

பொதுவாக திரைப்படங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வரும் அஞ்சலி, அதில் தனக்கு ஏற்றவாறு கச்சிதமான மேக்கப்புடன் வந்து அனைவரையும் அசத்தி வந்த நிலையில் தற்பொழுது மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டுள்ளார்.

இவ்ளோ அழகா இருக்கீங்களே!!

இவ்ளோ அழகா இருக்கீங்களே!!

வெறும் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் அணிந்தவாறு மேக்கப் ஏதும் அணியாமல் நெற்றியில் ஒரே ஒரு பொட்டு மட்டும் வைத்துக் கொண்டு ஓரக்கண்ணால் பார்த்து ரசிகர்கள் அனைவரையும் கிளீன் போல்ட் ஆக்கி வரும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைகளில் வேற லெவல் வைரலாகி வருகிறது. மேலும் அஞ்சலியை இதுவரை மேக்கப்புடன் மட்டுமே பார்த்து வந்து அவரது ரசிகர்கள் தற்போது முதன்முறையாக மேக்கப் அணியாத இந்த மிக அழகான படத்தை பார்த்து வாய் பிளந்தவாறு "மேக்கப் போடாமல் நீங்க இவ்ளோ அழகா இருக்கீங்களே!!" என ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.

பாராட்டுக்களை பொழிய

பாராட்டுக்களை பொழிய

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் வெப் சீரிஸ், மற்றும் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கும் "வக்கீல் சாப்" உள்ளிட்ட மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படங்களில் நடித்து வரும் அஞ்சலியை லாக்டவுன் முடிந்து திரையில் பார்க்க பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த மேக்கப் இல்லாத புகைப்படங்கள் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு பாராட்டுக்களை பொழிய வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X