Actress Anjali: நடிகை அஞ்சலி புதிய போட்டோஷுட்.. அழகு சும்மா அள்ளுதே!

சென்னை: தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் அடுத்தடுத்து நடித்துவருகிறார் நடிகை அஞ்சலி. கடந்த 2007ம் ஆண்டில் தமிழில் கற்றது தமிழ் படம் மூலம் என்ட்ரி கொடுத்த இவர், தொடர்ந்து சிறப்பான இயக்குநர்களுடன் சிறப்பான கதைக்களங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து அங்காடித் தெரு, மங்காத்தா, இறைவி, எங்கேயும் எப்போதும் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து நடித்துவந்த அஞ்சலி, இடையில் சில காலகட்டங்கள் நடிப்பிலிருந்து விலகியிருந்தார். இந்நிலையில் தெலுங்கில் இவரது கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி படம் 50வது படமாக ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதையடுத்து தமிழில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி ஆகியோருடன் இணைந்து ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படத்தின் போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Actress Anjali recent photoshoot in Instagram

நடிகை அஞ்சலி: நடிகை அஞ்சலி தமிழில் வெளியான கற்றது தமிழ் படம் மூலம் அறிமுகமானார். படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக மாஸ் காட்டியிருந்தார் அஞ்சலி. இந்தப் படத்தை தொடர்ந்து முன்னணி இயக்குநர்களுடன் இணையும் வாய்ப்பு அஞ்சலிக்கு தொடர்ந்தது. தமிழில் மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அங்காடித்தெரு, இறைவி உள்ளிட்ட மாஸான படங்களில் நடித்துள்ளார் அஞ்சலி. தற்போது ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நிவின் பாலி, சூரி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். படம் விரைவில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு தெலுங்கில் அஞ்சலியின் கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி படம்: இந்தப் படம் கீதாஞ்சலி படத்தின் இரண்டாவது பாகமாக சிவ துர்லபதி இயக்கத்தில் வெளியாகியுள்ளது. அஞ்சலியின் 50வது படமாக இந்தப் படம் வெளியாகியுள்ளது. படத்திற்காக படக்குழுவினருடன் அடுத்தடுத்த பிரமோஷன்களில் அஞ்சலி ஈடுபட்டார். இவருக்கு தயாரிப்பாளர் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த பிரமோஷனில் பேசிய அஞ்சலி, இது தனக்கு நடத்தி வைக்கப்படும் 5வது திருமணம் என்று குறிப்பிட்டார். தான் கண்டிப்பாக திருமணம் செய்துக் கொள்வேன் என்றும் அது தற்போது இல்லை என்றும் அவர் கூறினார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: சமூக வலைதளங்களிலும் அஞ்சலி தொடர்ந்து ஆக்டிவாக காணப்படுகிறார். இதனிடையே தற்போது இன்ஸ்டாகிராமில் அஞ்சலி புதிய போட்டோஷுட்டை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். எப்போதும் அடக்க ஒடுக்கமான கெட்டப்பில் ரசிகர்களை கவர்ந்துவரும் அஞ்சலி, இந்தப் புகைப்படங்களில் மிகவும் மாடர்னாக மிரட்டலான போஸ்களை கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களின் கேப்ஷனில் ஹாப்பி வீக்எண்ட் என்றும் கூறியுள்ளார். இதில் மாடர்ன் டிரஸ்ஸாக இருந்தபோதிலும் இந்த உடை வெகுவாக கவர்ந்துள்ளது.

ராம் இயக்கத்தில் அஞ்சலி: அடுத்ததாக இயக்குநர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்து முடித்துள்ளார் அஞ்சலி. இந்தப் படத்தில் அவருடன் நிவின் பாலி, சூரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். மானுடத்தின் காதலை பற்றியும் இந்த உலகத்தின் தேவை குறித்தும் இந்தப் படம் பேசுவதாக முன்னதாக ராம் தனது பேட்டியொன்றில் கூறியிருந்தார். காதல் என்ற பிரபஞ்ச சக்திதான் இந்த உலகத்தை தன் கையில் பிடித்து வைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்தப் படத்தின் பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X