என்ன இப்படி இறங்கிட்டாங்க நடிகை அஞ்சலி... நல்லாதான் இருக்கு!
சென்னை : கற்றது தமிழ், அங்காடித் தெரு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் நடிகை அஞ்சலி.
Recommended Video
தொடர்ந்து தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தின்மூலம் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகை அஞ்சலி
கற்றது தமிழ் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி தொடர்ந்து அங்காடித் தெரு படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை அஞ்சலி. தூங்கா நகரம், சேட்டை, கலகலப்பு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.மேலும் தெலுங்கு திரையுலகிலும் வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

தெலுங்கில் படம்
தற்போது தெலுங்கில் சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ளார். கியாரா அத்வானி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அழகான தோற்றத்தில் அஞ்சலி
சமீபத்தில் தன்னுடைய உடலை ஸ்லிம்மாக்கி சிறப்பான தோற்றத்தில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் குஷியாகியுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ட்விட்டர் பக்கத்தில் வீடியோ
இதனிடையே தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கட்டில் பக்கத்தில் இருந்துக் கொண்டு கையை பிடிக்காமல் எம்பி குதிக்கிறார். தொடர்ந்து வெற்றியுடன் புன்னகைக்கிறார். பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக காட்சியளிக்கிறார்.

ப்ரேக் டைம் வீடியோ
ப்ரேக் டைமில் ஃபன் செய்வதாக அந்த வீடியோவின் கேப்ஷனில் அஞ்சலி குறிப்பிட்டுள்ளார். அழகான பெண்கள் எதை செய்தாலும் அழகுதான் என்பதை அவர் இந்த வீடியோவில் நிரூபித்துள்ளார். ஆயினும் அவர் செய்துள்ள இந்த முயற்சி சறறு கடினமானதுதான்.


Click it and Unblock the Notifications











