Actress Anjali: யுவன் -ராம் மேஜிக்.. ஏழு கடல் ஏழு மலை பட பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த அஞ்சலி!

சென்னை: இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் நடிகை அஞ்சலி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். முன்னதாக தங்க மீன்கள், பேரன்பு போன்ற படங்களை இயக்கிய ராம், இந்த படத்தை மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் உருவாக்கியுள்ளார். படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த கவனத்தை பெற்றது. இதில் கற்றது தமிழ் படத்தின் சாயல் வெளிப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இருந்த போதிலும் இந்த படம் ரோட்டர்டேம் உலக திரைப்பட விழா உள்ளிட்டவற்றுக்கு தேர்வாகி வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் வெளியான வசனங்கள் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளன. ஒருத்தரை விட்டு ஒருத்தர் போறதுக்கு வேணா ஆயிரம் காரணம் இருக்கும், ஆனால் ஒருத்தர் கூட ஒருத்தர் போறதுக்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும், அது காதல் போன்ற வசனங்கள் ரசிகர்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விரைவில் ரிலீசாகவுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Actress Anjali shared about the First single update of Ezhu kadal Ezhu malai movie

இயக்குநர் ராம்: தங்க மீன்கள், பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். சில படங்களில் இவரே லீட் கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்நிலையில் அவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் ஏழு கடல் ஏழு மலை. இந்த படத்தில் பிரேமம் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் நிவின் பாலி லீட் கேரக்டரில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி இணைந்துள்ள இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ முன்னதாக வெளியாகி ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்திருந்தது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துவரும் இந்த படத்தில் நடிகர் சூரியும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

ஏழு கடல் ஏழு மலை படம்: படம் ரோட்டர்டேம் உலக திரைப்பட விழா உள்ளிட்டவற்றில் வெளியிட தேர்வாகி ரசிகர்களை சர்வதேச அளவில் கவர்ந்து வருகிறது. இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் நிவின் பாலி பேசிய பல வசனங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அந்த வகையில் அஞ்சலியும் இந்த படத்தில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ முன்னதாக வெளியான கற்றது தமிழ் படத்தின் சாயலை ஆங்காங்கே வெளிப்படுத்தியது. இருந்த போதிலும் காதலை பின்னணியாக கொண்டுள்ள இந்த ஏழு கடல் ஏழு மலை படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பர்ஸ்ட் சிங்கிள் குறித்து அஞ்சலி அப்டேட்: இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாக உள்ளதாக நடிகை அஞ்சலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தற்போது தெரிவித்துள்ளார். இயக்குனர் ராம் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மேஜிக், ஐந்தாவது படமாக ஏழு கடல் ஏழு மலையிலும் தொடர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மறுபடியும் நீ என்ற பாடல் வெளியாக உள்ளதாகவும் அவர் அப்டேட் தெரிவித்துள்ளார். வரும் பிப்ரவரி 14-ஆம் நாள் காதலர் தின ஸ்பெஷலாக இந்த பாடல் வெளியாக உள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த போஸ்ட் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Actress Anjali shared about the First single update of Ezhu kadal Ezhu malai movie

காதலர் தினத்தில் வெளியாகும் பர்ஸ்ட் சிங்கிள்: அதில் யுவன் சங்கர் ராஜா மாஸாக இருப்பது போன்ற போஸ்டரையும் அவர் பகிர்ந்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த அழகான காதல் கதையை மையமாகக் கொண்ட படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை மிகச் சிறப்பான பலத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். காதலர் தினத்தில் இந்த பாடல் வெளியாகியுள்ளதால் கண்டிப்பாக காதலை மையமாகக் கொண்ட பாடலாகவே அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிகமான படங்களில் நடிக்காமல் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே தற்போது அஞ்சலி நடித்து வருகிறார். அந்த வகையில் அவருக்கு ரீ என்ட்ரி தரும் படமாக ஏழு கடல் ஏழு மலை படம் அமையும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக ராம் இயக்கத்தில் அவர் நடித்திருந்த கற்றது தமிழ் படம் அவரது கேரியரில் மிகச் சிறப்பான படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X