Anjali - மோசமான உறவில் இருந்தேன்.. பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.. சீக்ரெட் சொன்ன அஞ்சலி

சென்னை: Anjali (அஞ்சலி) ஒருவருடன் மோசமான உறவில் இருந்ததாகவும் அதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை என நடிகை அஞ்சலி தெரிவித்திருக்கிறார்.

கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அஞ்சலி. ராம் இயக்கி ஜீவா நடித்திருந்த அந்தப் படம் கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்பட்டுவருகிறது. படம் மட்டுமின்றி அதில் நடித்த அஞ்சலிக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை ஒரு சிறந்த நடிகையாக அடையாளப்படுத்திக்கொண்டார்.

Actress Anjali Talks in Recent Interview about Her Relationship

முன்னணி நடிகை: இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் ஏராளம் வர ஆரம்பித்தன. அதன்படி அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார். அழகு மட்டுமின்றி திறமையான வெகு சில நடிகைகளில் ஒருவர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார் அவர்.

காணாமல் போன அஞ்சலி: ஒவ்வொரு படத்திலும் தனது தனித்துவமான நடிப்பை காண்பித்துர் அசிகர்களை கவர்ந்த அவரை சுற்றி சில சர்ச்சைகள் எழுந்தன. இதன் காரணமாக திரையுலகிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்தார். நீண்ட் இடைவேளைக்கு பின் சிங்கம் 2 படத்தில் பாடல் ஒன்று நடனம் ஆடி; அதனையடுத்து ஜெயம் ரவியுடன் சலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருந்தாலும் பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை.

மீண்டும் கவனம்: இந்த சூழலில் மீண்டும் அவர் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ஃபால் என்ற வெப் சீரிஸில் நடித்த அவர் தற்போது ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் நடித்திருக்கிறார். கற்றது தமிழ் எப்படி அஞ்சலிக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்ததோ அதேபோல் இந்தப் படமும் பெரும் அடையாளமாக மாறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர்.

கட்டுப்பாட்டில் அஞ்சலி?: இதற்கிடையே நடிகை அஞ்சலி திரையுலகில் இருந்து காணாமல் போனதற்கு அவர் செய்த காதல்தான் என்று கூறப்பட்டது. அதாவது தெலுங்கு திரையுலகில் நடித்தபோது ஒரு முக்கிய புள்ளியின் கட்டுப்பாட்டில் இருந்ததாக அப்போது கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அவர் தெலுங்கு முக்கிய புள்ளி கட்டுப்பாட்டில் எல்லாம் இல்லை. நடிகர் ஜெய்யுடன் தனி அப்பார்ட்மெண்ட்டில் வசித்துவந்தார். அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னைதான் அவரின் மன உளைச்சலுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

மோசமான உறவு?: ஆனால் அதுகுறித்து அஞ்சலி பெரிதாக எந்த ரெஸ்பான்ஸும் செய்யவில்லை. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதில் அவரிடம் ரிலேஷன்ஷிப் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நான் ஒரு மோசமான நபருடன் உறவில் இருந்தேன். ஒருகட்டத்தில் அந்த உறவில் நடந்த விஷயங்களை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன்" என்று குறிப்பிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் அந்த மோசமான நபர் ஜெய்தானா என கேள்வி எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X