இந்த உலகத்தோட எல்லா அன்பும் மகிழ்ச்சியும் கிடைக்கட்டும்... அஞ்சலி வாழ்த்து யாருக்கு?

சென்னை : நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கில் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் ராமின் பிறந்தநாளையொட்டி அஞ்சலி தனது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ராம்

இயக்குநர் ராம்

இயக்குநர் ராம் கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தனது 13 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் 4 படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் உலக நவீனமயமாக்கல் உள்ளிட்டவற்றை கேள்விக்குட்படுத்தி சிறப்பான இயக்குநராக இந்திய அளவில் தன்னை நிலைநிறுத்தியுள்ளார் ராம்.

அதிர்வலைகளை ஏற்படுத்திய படம்

அதிர்வலைகளை ஏற்படுத்திய படம்

தன்னுடைய முதல் படமான கற்றது தமிழ் மூலம் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். அந்தப் படத்தில் காதல், திருமணம் உள்ளிட்டவற்றை மையமாக கொண்டு உலகதரத்தில் பல்வேறு விஷயங்களை பேசியிருப்பார். தொடர்ந்து தங்க மீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய படங்களிலும் மற்றவர்கள் யோசிக்க தயங்கும் விஷயங்களை காட்சி படுத்தியிருப்பார்.

புதிய படத்தின் சூட்டிங்

புதிய படத்தின் சூட்டிங்

இந்நிலையில் தற்போது நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்க தன்னுடைய அடுத்த படத்தின் சூட்டிங்கை துவங்கியுள்ளார் ராம். தனுஷ்கோடியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 5ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

டைரக்டர் ராம் பிறந்தநாள்

டைரக்டர் ராம் பிறந்தநாள்

மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரிக்கிறார். வழக்கம்போல ராமின் விருப்பத்திற்குரிய யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இன்றைய தினம் இயக்குநர் ராம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

நடிகை அஞ்சலி வாழ்த்து

நடிகை அஞ்சலி வாழ்த்து

இதையொட்டி நடிகை அஞ்சலி தனது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கவிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அஞ்சலி, இந்த உலகத்தின் அனைத்து அன்பு மற்றும் சந்தோஷங்கள் அவருக்கு கிடைக்கட்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் இணைந்துள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

உலகத்தர திரைப்படங்கள்

உலகத்தர திரைப்படங்கள்

உலகத்தரத்தில் தமிழ்ப்படங்களை கொடுத்துவரும் இயக்குநர் ராம், மேலும் பல தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் ஆசையாக உள்ளது. தற்போது அவரது இயக்கத்தில் துவங்கப்பட்டுள்ள படமும் அத்தகைய ஒரு அற்புதமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X