Don't Miss!
- News
வட இந்தியர்கள் பாஜக வாக்காளர்கள்.. அவர்களை ஆதரிக்க ஒரு கூட்டம் இங்கே இருக்கு..அட்டாக் மோடில் சீமான்
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பட்டுப் புடவையும் குட்டி பப்பியும்.. நடிகை அஞ்சலி போலோ உடன் எடுத்த க்யூட் புகைப்படங்கள்!
சென்னை : பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்து வரும் தெலுங்கு திரைப்படத்தில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
முதல் முறையாக ராம் இயக்கத்தில் நிவின்பாலி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இருக்குற
கலவரம்
பத்தாதா
பிக்பாஸ்?
ஏன்
இப்படி?
புரமோவால்
பீதியாகும்
நெட்டிசன்ஸ்!
இந்த நிலையில் பட்டுப் புடவையில் தான் செல்லமாக வளர்க்கும் போலோ பப்பியுடன் எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படங்களை இப்பொழுது பகிர்ந்துள்ளது வைரலாகி உள்ளது.

நேரடியாக தெலுங்கு திரைப்படம்
அறிமுகமான முதல் படத்திலிருந்தே வித்தியாசமான கதைகளைத் தொடர்ந்து ஏற்று நடித்து வரும் நடிகை அஞ்சலி தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான முன்னணி நடிகையாக உள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். பிரம்மாண்ட படங்களை இயக்கிய தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தி இயக்குனர் ஷங்கர் இப்பொழுது நேரடியாக தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்குகிறார்

முக்கிய வேடத்தில்
தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் ராம் சரண் நடிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க நடிகை அஞ்சலியும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார்.

ராம் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில்
கற்றது தமிழ் தொடங்கி இயக்குனர் ராம் இயக்கத்தில் தரமணி மற்றும் பேரன்பு வரை தொடர்ந்து ஒவ்வொரு படங்களிலும் கதாநாயகியாக நடித்து வரும் அஞ்சலி இப்பொழுது மீண்டும் ராம் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் ராம் இயக்கி வர இதன் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Recommended Video

பட்டுப்புடவையில் போலோ பப்பியுடன்
தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் உருவாகும் இந்த படத்தில் நிவின் பாலி மற்றும் அஞ்சலி இலங்கை தமிழராக நடிக்கின்றனர் என கூறப்படுகிறது. இதற்கிடையில் பூச்சாண்டி,காண்பது போய் உள்ளிட்ட படங்கள் அஞ்சலிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்க உள்ளது. இந்த நிலையில் பட்டுப்புடவையில் செல்லமாக வளர்க்கும் போலோ பப்பி குட்டியுடன் கொஞ்சி விளையாடும் க்யூட் புகைப்படங்களை இப்பொழுது பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.