Anju Kurian: பிரேமம் பட நடிகை அஞ்சு குரியனுக்கு நிச்சயதார்த்தம்.. அவங்க சொன்ன விஷயம்தான் ஹைலைட்!

கொச்சி: மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து தன்னுடைய அழகான சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் அஞ்சு குரியன். மலையாளத்தில் பிரேமம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தமிழில் நேரம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் தற்போது அஞ்சு குரியன் தன்னுடைய வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளார். இவருக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதன் புகைப்படங்களை தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அஞ்சு குரியன் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களிடையே பகிர்ந்துள்ளார்.

anju kurian wolf movie engagement

நடிகை அஞ்சு குரியன்: மலையாளத்தில் அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் அஞ்சு குரியன். பிரேமம், ஓம் சாந்தி ஓசானா, ஞான பிரகாசன் என ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்த படங்களில் நடித்துள்ள அஞ்சு குரியன் தமிழிலும் நேரம் படத்தின்மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். தொடர்ந்து சென்னை டூ சிங்கப்பூர் படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர், அடுத்தடுத்து சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பிரபு தேவாவுடன் இணைந்து வுல்ஃப் படத்தில் நடித்து வருகிறார்.

anju kurian wolf movie engagement

சந்தோஷம் + அன்புப் பயணம்: இந்நிலையில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதை ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தின்மூலம் பகிர்ந்துள்ளார் அஞ்சு குரியன். ரோஷன் கரிப்பா என்பவருடன் அஞ்சு குரியனுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதன் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தங்களுடைய இந்த பயணம் சந்தோஷம் மற்றும் அன்பால் நிறைந்துள்ளதாகவும் இந்த நேரத்தில் கடவுளின் ஆசிர்வாதமும் நிறைந்துள்ளதாகவும் அஞ்சு குரியன் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அஞ்சு குரியன் -ரோஷன் கரிப்பா நிச்சயதார்த்தம்: அஞ்சு குரியன் கேரளாவின் கோட்டயத்தை சேர்ந்தவர். கடந்த 2016ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான கவி உதேசிச்சத்து படத்தின்மூலம் இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார். தொடர்ந்து அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரிலீசான நேரம் படம் இவருக்கு தமிழில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. படங்களில் மட்டுமில்லாமல் பல குறும்படங்களிலும் இசை தொகுப்புகளிலும் அஞ்சு குரியன் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.இந்நிலையில் தற்போது அஞ்சு குரியனுக்கு ரோஷன் கரிப்பாவுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

anju kurian wolf movie engagement

விரைவில் திருமணம்: விரைவில் இவர்களின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் தன்னுடைய கல்லூரி படிப்பை மேற்கொண்ட இவர், மாடலிங்கிலும் ஈடுபட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா என்பது குறித்து அறிவிக்கவில்லை. இவர் கடைசியாக நடித்து ஆப்ரஹாம் ஓஸ்லர் படம் வெளியாகி மிகப்பெரிய பாராட்டுக்களை இவருக்கு பெற்றுக் கொடுத்தது. இவர் மணமுடிக்கவுள்ள ரோஷனும் கோட்டயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X