தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார்.. அப்போ எனக்கு 19 வயசு தான்..பகீரை கிளப்பிய நடிகை!

சென்னை: பிரபல பாலிவுட் நடிகை அங்கிதா லோகாண்டே, தென்னிந்திய தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்தார்கள். தினமும் வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். நடிகை அங்கிதாவின் இந்த பேட்டியைப் பார்த்த பயில்வான் ரங்கநாதன் அவரை கடுமையாக திட்டி தீர்த்துள்ளார்.

இந்தியில், பல ஹிட் படங்களில் நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத், சீரியல் நடிகராக இருந்து, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி பின்பு பாலிவுட்டிற்குள் நுழைந்தார். இந்தியில் வெளியான பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள இவர், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்ததன் மூலம் உலகளவில் ஃபேமஸ் ஆனார். நன்கு வளர்ந்து வந்த சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Actress Ankita lokhande talked about casting couch experience

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலி தான் அங்கிதா லோகாண்டே. இவர் 1984 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் டிசம்பர் 19 ஆம் தேதி பிறந்தார். இவருக்கும் சுஷாந்த் சிங்கிற்கும் பவித்ர ரிஷ்டா என்ற தொடரில் இணைந்து நடித்த போது, காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் லிவ்விங் டூ ரிலேஷன்ஷிப்பில் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொள்ள போவதாக அறிவித்தனர். பின் இருவரும் வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

அங்கிதா லோகாண்டே: இதையடுத்து, சுஷாந்த் சிங் ராஜ்புத் 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரை நினைத்து வருத்தத்துடன் அங்கிதா இன்ஸ்டாகிராமில் பல பதிவுகளை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, 2021 ஆம் ஆண்டு விக்கி ஜெயின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 17வது சீசனில் கலந்து கொண்டு 3வது இடத்தைப் பிடித்தார்.

Actress Ankita lokhande talked about casting couch experience

தினமும் டார்ச்சர்: இந்நிலையில், அங்கிதா லோகாண்டே ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், சில ஆண்டுகளுக்கு முன், மும்பையில் வாய்ப்பு தேடி அலைந்த போது, ஆடிஷனுக்கு சென்றேன். அப்போது தயாரிப்பாளர் தன்னை அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள் என்றும், தென்னிந்திய திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக கமிட் ஆனேன் அப்போது இந்த தயாரிப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைத்தார்கள். அப்போது, நான் மிகவும் சின்ன பொண்ணு எனக்கு 19 வயது தான் ஆகியிருந்தது.

என்னை விட்டுவிடுங்கள்: என்னிடம் இவ்வளவு கேவலமாக கேட்பார்கள் என நான் நினைக்கவே இல்லை. நான் ஒருமாதிரி நிலைகுலைந்து விட்டேன். கூடுதலாக பணம் கிடைக்கும், சிறந்த நடிகையாக வலம் வரலாம் என்றெல்லாம் சொன்னார்கள். உங்க தயாரிப்பாளருக்கு திறமையான நடிகையை விட, அட்ஜஸ்ட் செய்யும் பெண் தான் வேண்டும் என்றால் என்னை விட்டு விடுமாறு சொல்லி கடுமையாக திட்டி விட்டு வந்துவிட்டேன் என அந்த பேட்டியில் அங்கிதா கூறியிருந்தார்.

பயில்வான் ரங்கநாதன்: இதுகுறித்து தனது யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன், மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலியான அங்கிதா லோகாண்டே, தன்னை தென்னிந்திய தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக பேட்டியில் கூறியுள்ளார். படுக்கைக்கு அழைத்தார்கள் என்பதை தைரியமாக சொல்லும் அந்த பெண். அந்த தயாரிப்பாளர் யார்... எந்த இயக்குநர்.. யார் அழைத்தார்கள் என்பதை சொல்வதில் என்ன தயக்கம். முதலில் அதை சொல்லுங்க, எதற்கு மூடி மறைச்சி பேசுறீங்க என்று அந்த நடிகையை கடுமையாக விளாசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X