கொட்டுக்காளி படத்தில் இருக்கிறது கல்கி படத்துல இல்லை.. என்ன அன்னா பென் இப்படி சொல்லிட்டாங்க!

சென்னை: நடிகர் சூரியின் கொட்டுக்காளி படம் இந்த மாதம் 27ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தில் சூரிக்கு நாயகியாக அறிமுகமாகிறார் அன்னா பென். படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், அதில் அன்னா பென் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதை பார்க்க முடிந்தது.

அன்னா பென்னின் அப்பா பென்னி 30 ஆண்டுகளை கடந்து திரைத்துறையில் எழுத்தாளராக பணியாற்றிவரும் நிலையில் அன்னா பென், தற்போது நாயகியாகியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான கும்பளங்கி நைட்ஸ் என்ற திரைப்படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர் அன்னா பென். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது உள்ளிட்டவற்றை குவித்துள்ளார்.

Soori Anna ben Kottukkaali movie

நடிகர் சூரி: நடிகர் சூரியின் கொட்டுக்காளி படம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக சூரி நாயகனாக நடித்து விடுதலை மற்றும் கருடன் படங்கள் வெளியான நிலையில் அந்த படங்கள் மிகப்பெரிய வசூலையும் வரவேற்பையும் சூரிக்கு பெற்றுக் கொடுத்துள்ளன. இந்நிலையில் அவர் நாயகனாக நடித்துள்ள மூன்றாவது படமாக வெளியாக உள்ளது கொட்டுக்காளி. இந்த படத்தில் அவருக்கு பிரபல மலையாள நடிகர் அன்னா பென் ஜோடியாக இணைந்துள்ளார். மலையாளத்தில் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான கும்பளங்கி நைட்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் அன்னா பென்.

விருதுகளை குவித்த அன்னா பென்: இந்த படம் அவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது உள்ளிட்டவற்றை பெற்றுக் கொடுத்துள்ளது. ஏராளமான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அன்னா பென், தொடர்ந்து ஹெலன், கப்பல்லா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் கேரள அரசின் மாநில விருதையும் அன்னா பென்னிற்கு பெற்றுக் கொடுத்துள்ளன. தொடர்ச்சியாக மூன்று வெற்றி படங்களில் நடித்துள்ளார் அன்னா. அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்க தொடர்ந்து சில ஆண்டுகளிலேயே பத்திருக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கொட்டுக்காளி படம்: இந்நிலையில் தற்போது சூரியின் கொட்டுக்காளி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த படம் குறித்து அடுத்தடுத்த பேட்டிகளை அன்னா பென் கொடுத்து வருகிறார், கூழாங்கல் படத்தை கொடுத்து கோலிவுட்டில் கவனத்தை ஈர்த்துள்ள வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது கொட்டுக்காளி படம். இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. ரிலீசுக்கு முன்னதாகவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்த படம் விருதுகளை குவித்துள்ள நிலையில் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

பிரமோஷன்களில் அன்னா பென்: இந்நிலையில் இந்த படம் குறித்து அடுத்தடுத்த பிரமோஷன்களை அன்னா பென் மேற்கொண்டு வருகிறார். இந்த படத்தில் மீனா என்ற கேரக்டரில் அவர் நடித்துள்ள நிலையில், மீனா தனக்குள் ஒரு அங்கம் என்பதை தான் அறிந்ததே இல்லை என்று முன்னதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மீனா மூலமாக மதுரை வழியாக தான் ரசிகர்களை அழகான பயணத்திற்கு அழைத்துச் செல்ல காத்திருப்பதாகவும் அவர் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்து பேட்டிகளை கொடுத்து வரும் அன்னா பென், தற்போது கொட்டுக்காளி மற்றும் தெலுங்கில் கல்கி 2898 ஏடி படஙகள் குறித்து பேசியுள்ளார்.

கல்கி படத்தில் இயற்கையான விஷயங்கள் எதுவுமே இல்லை என்றும் செட்களில் மட்டுமே அடுத்தடுத்த காட்சிகள் எடுக்கப்பட்டன என்றும் அதனால் செயற்கை தனமான காட்சிகளிலேயே நடிக்க முடிந்தது என்றும் ஆனால் கொட்டுக்காளியில் இயற்கையோடு இணைந்து தான் நடித்துள்ளதாகவும் உற்சாகம் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேட்டி கொட்டுக்காளி படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X