பிங்க் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் சிலுக்குக்கே டஃப் கொடுக்கும் அனு இமானுவேல்!
சென்னை : இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் விஷால் டிடெக்டிவ் ஏஜென்டாக நடித்திருந்த துப்பறிவாளன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனு இமானுவேல்.
நம்ம வீட்டுப் பிள்ளையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து அசத்திய இவர் இப்பொழுது தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள மகா சமுத்திரம் திரைப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்பொழுது சிலுக்குக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு ட்ரான்ஸ்பரன்ட் பிங்க் சேலையில் இடையழகை காட்டிக்கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசிகர்கள் ஜொள்ளுவிட ரசித்து வருகின்றனர்.

விஷால் டிடெக்டிவ் ஏஜென்டாக
தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஷ்கின் திரைப்படங்களுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை இயக்கி அதில் வெற்றி பெற்று வரும் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் டிடெக்டிவ் ஏஜென்டாக நடித்திருந்த துப்பறிவாளன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அனு இமானுவேல். துப்பறிவாளன் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே இவர் வந்து சென்றதால் ரசிகர்களால் பெரிதாக கவனிக்கப்படவில்லை.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக
இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டுப் பிள்ளையில் படம் முழுவதும் நிறைவாக நடித்து அனைவரையும் ரசிக்க வைத்து நடிப்பு, கவர்ச்சி மற்றும் க்யூட் நடனம் என அசத்தி இருந்த அனு இமானுவேல் இப்படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியுள்ளார். குறிப்பாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெறும் காந்த கண்ணழகி பாடல் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.

இரண்டு ஹீரோயின்கள்
தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வரும் அனு இமானுவேல் இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள மகா சமுத்திரம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சர்வானந்த் மற்றும் சித்தார்த் என இரண்டு முன்னணி ஹீரோக்கள் இதில் நடித்திருக்க அனு இமானுவேல் மற்றும் அதிதி ராவ் இதில் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் இடையழகு
ஆர் எக்ஸ் 100 பட இயக்குனர் அஜய் பூபதி இந்த படத்தை இயக்கி இருக்க அக்டோபர் 14ஆம் தேதி மகா சமுத்திரம் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழில் முன்னணி நடிகர் ஒருவருக்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் அனு இமானுவேல் ஒப்பந்தமாக இருக்க அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி அலை வீசி வருகிறார். அந்த வகையில் இப்பொழுது பிங்க் நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் இடையழகு தெரிய பார்க்கும் அனைவரும் சொக்கிப் போகும் அளவிற்கு சிலுக்குக்கே டஃப் கொடுக்கும் கொள்ளை அழகில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











