மேல போகும்போது திமிரை காட்டாதே.. மனோரமா சொன்ன அட்வைஸ்.. யார்கிட்ட தெரியுமா?

சென்னை: நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர் என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருகிறார் நடிகை அனு ஹாசன். கடந்த 1995ம் ஆண்டில் வெளியான இந்திரா படத்தில் நாயகியாகத்தான் அறிமுகமானார் அனு ஹாசன். தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து துணை கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2000ம் ஆண்டில் தொலைக்காட்சியில் வெளியான சினேகிதியே தொடரில் இவரது பர்பார்மென்ஸ் சிறப்பான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அவர் அவன் அவள், அம்மாவுக்கு ரெண்டுல ராகும் மற்றும் மலையாளத்தில் விவாஹிதா போன்ற தொடர்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக மாறினார்.

television anu haasan coffee with anu show

நடிகை அனு ஹாசன்: நடிகை அனு ஹாசன் அடுத்தடுத்து சிறப்பான தளங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். சினிமாவில் நடிகையாக மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நிகழ்ச்சிகளிலும் இவரது அடுத்தடுத்த செயல்பாடுகள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளன. கடந்த 1995ம் ஆண்டில் வெளியான இந்திரா என்ற படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார் அனு ஹாசன். தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் துணை கேரக்டர்களில் நடித்து மிகப்பெரிய ரசிகர்களை பட்டாளத்தை தன்வசப்படுத்தியுள்ளார். கடந்த 2000ம் ஆண்டில் டிவியில் வெளியான சினேகிதியே தொடரின்மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறினார்.

அடுத்தடுத்த சீரியல்கள்: இதையடுத்து அவர் அவன் அவள், அம்மாவுக்கு ரெண்டுல ராகு மற்றும் மலையாளத்தில்விவாஹிதா போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலுமு இவர் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரபல டாக் ஷோவான காபி த் அனு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். மூன்று சீசன்களாக தொடர்ந்து 4 ஆண்டுகளை கடந்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மாஸ் காட்டியது. இதனிடையே ரவீனா டன்டன், ப்ரீத்தி ஜிந்தா, கீது மோகன்தாஸ் உள்ளிட்ட மற்ற மொழி நடிகைகளுக்கும் குரல் கொடுதது டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் செயல்பட்டு வருகிறார் அனு ஹாசன்.

மனோரமா கொடுத்த அட்வைஸ்: தொடர்ந்து பல சமூக நிகழ்வுகளிலும் பங்கேற்று வரும் அனு ஹாசன், Suuny side up என்ற நூலையும் எழுதியுள்ளார். புத்தம் புது காலை, சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்களில் கடைசியாக நடித்திருந்த அனு ஹாசன் தொடர்ந்து நடிப்பிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியொன்றில் ஆச்சி மனோரமா குறித்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார். மனோரமாவுடன் காபி வித் அனு நிகழ்ச்சிக்காக தயாராகிக் கொண்டிருந்த நிலையில், தன்னிடம் பேசிய மனோரமா, அனும்மா, காபி வித் அனு நல்லா போய்க்கிட்டிருக்கு, ஆனா மேல போகும்போது எல்லாருக்கும் ஹலோ சொல்லிட்டு போம்மா என்றும் திமிரை காட்டக்கூடாது என்றும் தனக்கு அட்வைஸ் கூறியதாக அனு ஹாசன் தெரிவித்துள்ளார்.

மறக்க முடியாத அட்வைஸ்: எப்படி இருந்தாலும் மேலே போனால் திரும்பி இறங்கி வரனும் என்றும் இறங்கி வருமபோது யாரும் குட்டாமல் இருப்பார்கள் என்றும் மனோரமா அட்வைசை தொடர்ந்துள்ளார். அவ்வளவு பெரிய சாதனையாளரான மனோரமாவின் இந்த மனித நேயம் குறித்து அனு ஹாசன் சிலிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர்களின் அனுபவத்தில் மேலே சென்றவர்கள் தங்களின் நிலை தாழ்ந்து நடந்துக் கொண்டதை பார்த்தாலோ என்னவோ இந்த அட்வைசை தனக்கு கூறியதாகவும் இதை மறக்க முடியாது என்றும் அவர் லும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X