தங்கச் சிலையே தோற்றுப் போகும் அளவிற்கு பளபளன்னு ஜொலிக்கும் நடிகை அனு இம்மானுவேல்!

சென்னை: மகா சமுத்திரம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சர்வானந்த் உடன் இணைந்து அல்லுடு அதுர்ஸ் என்ற திரைப்படத்தில் நடிகை அனு இம்மானுவேல் நடித்து வருகிறார்

அல்லு சிரிஷ் உடன் இணைந்து நடித்து வரும் காதல் திரைப்படத்திற்கு பிரேமா காதன்டா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை அனு இம்மானுவேல் இப்பொழுது தங்கச் சிலையே தோற்றுப் போகும் அளவிற்கு கொள்ளை அழகில் ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கவனிக்கப்படவில்லை

கவனிக்கப்படவில்லை

தமிழ் சினிமாவிற்கு புது வரவாக வந்துள்ள நடிகை அனு இமானுவேல் தமிழுக்கு முதல்முறையாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பரிவாளன் படத்தில் நடித்து அறிமுகப்படுத்தப்பட்டார். விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றிருந்தாலும் இதில் கதாநாயகியாக நடித்த அனு இமானுவேல் பெரிதாக கவனிக்கப்படவில்லை

நம்ம வீட்டுப் பிள்ளையில் ஆல்-ரவுண்டராக

நம்ம வீட்டுப் பிள்ளையில் ஆல்-ரவுண்டராக

இந்தநிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டுப் பிள்ளையில் நடித்து கலக்கி இருந்தார். நடிப்பு, நடனம், கவர்ச்சி, காமெடி என நம்ம வீட்டுப் பிள்ளையில் ஆல்-ரவுண்டராக நடித்து பட்டையை கிளப்பிய அனு இமானுவேல்லுக்கு இப்பொழுது தமிழிலும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நம்ம வீட்டுப்பிள்ளை வெற்றியை தொடர்ந்து மீண்டும் முன்னணி இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது ஆனால் இன்றுவரை அது உறுதி செய்யப்படவில்லை

மீண்டும் சர்வானந்த்

மீண்டும் சர்வானந்த்

இருப்பினும் தெலுங்கில் இவர் பல படங்களில் மிக பிஸியாக நடித்து வருகிறார். ஆர் எக்ஸ் 100 பட இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் சித்தார்த்,அதிதி ராவ், அனு இம்மானுவேல், சர்வானந்த் ஆகியோர் இணைந்து நடித்த மகா சமுத்திரம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மகா சமுத்திரம் படத்தை தொடர்ந்து மீண்டும் சர்வானந்த் உடன் இணைந்து அல்லுடு அதுர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Recommended Video

தமிழில் முதல் Time Loop படம் இதுதான் | Actress Mirnalini Ravi Exclusive | Jango | Filmibeat Tamil
தங்க சிலையே தோற்றுப் போகும்

தங்க சிலையே தோற்றுப் போகும்

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான அல்லு சிரிஷ் உடன் இணைந்து பிரேமா காதன்டா என்ற காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இருவரும் ரொமான்ஸ் காட்சிகளில் மிக நெருக்கமாக நடித்தது மட்டுமல்லாமல் நிஜத்திலும் இருவரும் காதலிப்பதாகவும் தெலுங்கு திரைப்படத் துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மிக விரைவிலேயே தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வர உள்ள அனு இமானுவேல் சமூக வலைதளங்களை கலக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தாறுமாறு செய்தவர். அந்த வகையில் இப்பொழுது வேற லெவல் கிளாமர் உடையில் தங்கச் சிலையே தோற்றுப்போகும் அளவுக்கு பளபளப்பாக மின்னும் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X