சோபாவில் ஹாயாக படுத்து ஆளை மயக்கும் அனு இமானுவேல்!
சென்னை : இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் டிடெக்டிவ் ஏஜென்டாக நடித்த துப்பரிவாளன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை இமானுவேல்
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் நடித்து ட்ரெண்டிங் நாயகியாக வலம் வந்தார்
இப்போது தெலுங்கில் பிஸியாக நடித்து வரும் அனு இம்மானுவேல் கவர்ச்சி புயலாக மாறி சோபாவில் ஹாயாக படுத்து போஸ் கொடுத்துள்ள ஆளை மயக்கும் புகைப்படம் வைரலாகிறது

ஒரு சில காட்சிகளில்
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனு இம்மானுவேல். முழுக்க முழுக்க விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியாவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட துப்பரிவாளன் திரைப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாகவே நடித்து இருந்தாலும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே தோன்றுவார். அதனால் ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை

கிராமத்து பெண்ணாகவே
இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டுப் பிள்ளை என்ற படத்தில் அனு இம்மானுவேல் நடித்து பிரபலமான ஹீரோயினியாக வலம் வந்தார். குடும்ப படங்களை இயக்குவதில் புகழ் பெற்ற இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் அட்டகாசமான நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாகவே நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட அந்த படத்தில் இடம்பெற்ற காந்தக்கண்ணழகி பாடலுக்கு இன்றும் ரசிகர்கள் பலகோடி உள்ளனர் அதில் அனு இம்மானுவேல் போட்ட நடனம் அனைவரையும் ஆட்டம் போட வைத்தது

காதல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்
தமிழில் நடித்த இரண்டே திரைப்படங்களில் பிரபலமான நடிகையாக அனு இமானுவேல் மாறி இருந்தாலும் அதைத் தொடர்ந்து தமிழில் எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை. இந்த நிலையில் தெலுங்கு படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி வரும் சமீபத்தில் காதல் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். தெலுங்கில் முன்னணி ஹீரோவாக உள்ள அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் தெலுங்கு சினிமாவில் உள்ளார்

சோபாவில் ஹாயாக
இப்பொழுது அல்லு சிரிஷுடன் நடிகை அனு இம்மானுவேல் இணைந்து பிரேமா காதன்டா என்ற படத்தில் நடித்து வருகின்றனர். முற்றிலும் ரொமான்டிக் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் அல்லு சிரிஷ், அனு இம்மானுவேல் இடையே பல நெருக்கமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பிரேமா காதன்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றன. எனவே இருவரும் காதலிப்பதாக டோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனு இமானுவேல் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோபாவில் ஹாயாக படுத்துக்கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள ஆளை மயக்கும் புகைப்படம் வைரலாகிறது.


Click it and Unblock the Notifications











