இந்தி நடிகருடன் காதலா? கடுப்பான நடிகை.. என் வாழ்க்கை என் விருப்பம் என காட்டமாக பதில்!

Recommended Video

Anupama Parameshwaram in love with Hindi Actor

சென்னை: இந்தி நடிகருடன் காதலா என்ற கேள்விக்கு என் வாழ்க்கை என் விருப்பம் என காட்டமாக பதிலளித்திருக்கிறார்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமானார் அனுபமா பரமேஸ்வரன்.

கொடி படத்தில் முட்டை வியாபாரம் செய்யும் பெண்ணாக முட்டை மாலதி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். துறுதுறு பெண்ணாக அவர் நடித்திருந்த அந்த கேரக்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தெலுங்கில் செம பிஸி

தெலுங்கில் செம பிஸி

கொடி படத்திற்கு பிறகு அனுபமா பரமேஸ்வரன் தமிழில் வேறு எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. ஆனால் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கில் செம பிஸியாக உள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.

மறுப்பு, அன்ஃபாலோ

மறுப்பு, அன்ஃபாலோ

அண்மையில் கிரிக்கெட் வீரர் பும்ராவை அனுபமா காதலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை இருவருமே மறுத்தனர். இதுபோன்ற கிசுகிசுக்கள் தொடரவே அனுபமாவை அன்ஃபாலோ செய்தார் பும்ரா.

வேலையில் கவனம்

வேலையில் கவனம்

இதனால் அந்த பிரச்சனை அதோடு முடிந்துவிட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தி வருவதாக கூறினார் அனுபமா பரமேஸ்வரன்.

இந்தி நடிகருடன் காதல்

இந்தி நடிகருடன் காதல்

இந்நிலையில் அனுபமா பரமேஸ்வரன் இந்தி நடிகர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் காதலிப்பதாகவும் தகவல் வெளியானது.

அநாகரிகம்

அநாகரிகம்

இதனால் கடுப்பான அனுபமா, காதலிப்பதும் கல்யாணம் செய்துகொள்வதும் என்னுடைய தனிப்பட்ட விஷயம். இந்த விஷயத்தில் அடுத்தவர் தலையிடுவதை அநாகரிகம் என நினைக்கிறேன்.

கவலை வேண்டாம்

கவலை வேண்டாம்

என் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும். இதுகுறித்து யாரும் கவலைப்படத்தேவையில்லை என காட்டமாக தெரிவித்திருக்கிறார். முன்னதாக கிரிக்கெட் வீரருடன் காதல் என கூறப்பட்ட நிலையில் தற்போது இந்தி நடிகருடன் காதல் என பேச்சு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X