அய்யோ... செம.. சுருட்டை முடி அழகி அனுபமாவின் க்யூட் போட்டோஸ் !

சென்னை : பார்த்தவுடன் உச்சுகொட்டும் அழகும்... ஆளை மயக்கும் வசீகர சிரிப்பு என தமிழக இளசுகளின் இதயத்தை வளைத்துப் போட்டவர் அனுபமா.

இவர், தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி திரைப்படத்தில் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார்.

சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது நெஞ்சை அள்ளும் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படம் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

பல மொழிகளில்

பல மொழிகளில்

நடிகை சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடிப்பில் வெளியான பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழித் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தெலுங்கில் கவனம்

தெலுங்கில் கவனம்

கொடிபடத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த இவருக்கு, பட வாய்ப்புகள் சரியாக வரவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் தனது கவனத்தை திருப்பி இவர், தேஜ் ஐ லவ் யூ, உன்னடி ஒகடே சிந்தகி, ஹலோ குரு ப்ரோமோ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார் அந்த படங்களும் தோல்வியை சந்தித்தன.

தள்ளிப்போகாதே

தள்ளிப்போகாதே

தற்போது இவர், அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப்போகாதே படத்தில் நடித்து உள்ளார். இத்திரைப்படம் டிசம்பர் 3ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நின்னுகோரி படத்தின் தமிழ் ரீமேக் தான் தள்ளிப்போகாதே. இத்திரைப்படத்தை ஆர் கண்ணன் இயக்கி உள்ளார்.

Recommended Video

இந்த படத்துக்கு Anupama தான் முதல் Choice Atharva Speech | Thalli Pogathey Pressmeet
க்யூட் போஸ்

க்யூட் போஸ்

சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அனுபமா தனது சமூகவலைத்தள பக்கத்தில் விதவிதமான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், மெரூன் நிறத்தில் பளபளக்கும் ஸ்டைலான சட்டையை அணிந்துள்ளார். மேலும் உடைக்கு ஏற்றால் போல, தனது சுருட்டை முடியை ஒரு பக்கமாக சீவி அப்படியே ஒரு லுக்குவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குள் மலைபோல் குவிந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X