அனுபமாவுக்கு கைகொடுக்குமா லாக் டவுன்? அப்பாவைக் காப்பற்ற மகளின் போராட்டம் வெல்லுமா? டீசர் வெளியிடு!

சென்னை: மலையாளத்தில் வெளியாகி தமிழிலும் நல்ல வரவேற்பு பெற்ற பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தனுஷின் கொடி படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். அண்மையில் இவர் நடித்து வெளியான சைரன் படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் சைரன் படத்தில் இவருக்கான போர்ஷன் கொடி படத்தைப் போலவே ரொம்பவும் குறைவு என்பதால் தமிழில் இவருக்கு இன்னும் அழுத்தம் திருத்தமான ஒரு ஓபனிங் கிடைக்கவில்லை என்று கூற வேண்டும்.


ஆனால் இப்படி இருந்தும் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் என்பது ஏராளம். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 16.3 மில்லியனுக்கு மேல் அவரது ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் கிளாமர் போட்டோ சூட்டுக்கு நிமிடத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் லைக்குகளை அளித்து விடுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதுவும் அவரது இன்ஸ்டாகிராம் டி.பி.க்கு மட்டும் லட்சோப லட்ச ரசிகர்கள் உள்ளனர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாக்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

Anupama Parameswaran Lyca Productions

இந்நிலையில் இவருக்கு தமிழில் மாஸ் ஓபனிங் கொடுக்கும் படங்களாக எதிர்பார்க்கப்படுவது லாக் டவுன் மற்றும் பைசன் படங்கள் தான். பைசன் படத்தினை மாரி செல்வராஜ் இயக்கி வருகின்றார். இந்த படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கின்றார். இதில் லாக் டவுன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனுபமா. லாக் டவுன் படத்தில் முழுக்க முழுக்க இவரைச் சுற்றியே கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தை அனுபமா ரொம்பவே நம்பி இருக்கிறார். மேலும் இந்த படம் கொரோனா காலகட்டத்தில் மக்கள் சந்தித்த இன்னல்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
Anupama Parameswaran Lyca Productions

லாக் டவுன் படத்தின் டீசர்

இந்நிலையில் லைக்கா புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் ஜீவா இயக்கிய லாக் டவுன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கதை முழுக்க முழுக்க லாக்டவுன் காலத்தில் மக்கள் சந்தித்த இன்னல்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு உண்மையான கதை ஆகும். ரகுநாதன் ஸ்ரீநாத் விபின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். கே ஏ சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Anupama Parameswaran Lyca Productions

டீசர் எப்படி இருக்கு?

மொத்தம் 40 நொடிகள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது அப்பாவை காப்பாற்ற மகள் பட்ட இன்னல்களை விளக்கும் விதமாக உள்ளது. அனிதா என்ற கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். அனுபமாவுக்கு வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குளோசப் ஷாட்டிலும் இறுக்கமான நடிப்பால் டீசரிலேயே கவனம் ஈர்க்கின்றார். மேலும் இந்த டீசரில் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. லைகா புரொடெக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளதால் படத்தினை பெரிய படங்கள் வராத காலகட்டத்தில் ரிலீஸ் செய்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாரட்டைப் பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Anupama Parameswaran Lyca Productions

தாக்கத்தை ஏற்படுத்துமா லாக் டவுன்?

லாக் டவுன் படங்கள் கொரோனா காலகட்டத்தில் ஒவ்வொரு தனிநபரும் உயிர் பயத்துடனே இருந்தனர். நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட தங்களது உறவினர்களை கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீட்க மருத்துவமனையில் போராடிய போராட்டங்கள் எல்லாம், நாம் அறியாதது இல்லை. இந்நிலையில் தமிழ் சினிமாவில் தொடங்கி உலக சினிமா வரை கொரோனாவால் ஏற்பட்ட லாக் டவுன் காலகட்டத்தை மையப்படுத்தி எக்கச்சக்கமான படங்கள் வெளிவந்துள்ளது. லாக் டவுன் இந்த படம் என்ன மாதிரியான தாக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Anupama Parameswaran Lyca Productions

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X